தாயகத்தையும் அதன் உயரிய மான்புகளையும் காக்க போரிட்ட மறக்குல மக்களையும் இந்த யுத்தத்தில் பங்கெடுத்த மறவர் நாட்டின் மாபெரும் படைத்தலைவர்களான வன்னிய தேவன், மதியழகன், குமாரத்தேவன்,மத்ததேவன், வீசுகொண்ட தேவன், கருத்துடையான் ஆகியோர்களை என்றென்றும் நினைவு கூறுவோம். உங்களின் வீரத்தையும் தாய்நாட்டிற்கு போரிட்ட கதைகளை எங்களின் சந்ததிக்களுக்கு கூறுவோம். என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்.
"போரெனில் புகலும் புனை கழல் மறவர்"(கலித்தொகை)
"பகையெனில் கூற்றம் வரினும் தொலையான் மறவனே"
மதுரை கைப்பற்றி,ஆண்டு கொண்டிருந்த விஜயநகரின் படைப்பிரிவின் தலைவனான விசுவநாத நாயக்கனின் வம்சத்தை சார்ந்த திருமலை நாயக்கரின் காலம். இவரது படைத்தலைவனான ராமப்பைய்யர் என்பவர் தலைமையிலான தெலுங்கு மற்றும் கன்னட கூட்டமைப்பு படைகளுடன் அவர்களின் துனைபடைகளாக சென்ற சில கூலிப்படைகளும் மறுபுறம் தமிழை தாய்மொழியாக கொண்ட மதுரையின் கிழக்கு பகுதியில் அமைந்திருந்த தமிழை தாய்மொழியாக கொண்ட செம்பி நாடு மறவர்களின் இராமநாதபுரம் அரசுகளின் மறவர் படைகள் மறுபுறமும்.
Picture Courtesy: The Hindu Dt. January 16, 2014 |
Ramappa Ayyan statue at Meenakshi temple at Koothiyarkundu village. Dwell on the past. A.Shrikumar. The Hindu Dt.
January 16, 2014.
ராமப்பையன் அம்மானை
இராமப்பையன் அம்மானை(சரஸ்வதி மகால் சுவடி என்.405)
இராமப்பையன் வரலாறு
சங்கையுள்ள வேதியர் குலத்தில் வந்தவன் கான்
துங்க வளனா துலங்க வந்த புத்திரன் காண்
சண்டைக்கு அனுப்புமாறு நாயக்கனை வேண்டியது
இராமப்பையன் அம்மானை(சரஸ்வதி மகால் சுவடி என்.405)
இராமப்பையன் வரலாறு
சங்கையுள்ள வேதியர் குலத்தில் வந்தவன் கான்
துங்க வளனா துலங்க வந்த புத்திரன் காண்
சண்டைக்கு அனுப்புமாறு நாயக்கனை வேண்டியது
"மதுரை நகர் வாழும் மன்னவனே,நீ கேளாய்
நாலுதிக்கு மெட்டும் பதினாறு கோணமெல்லாம்
திக்கடங்க வெட்டித் திறை கொண்டே தானு மின்று வணங்காத
மன்ன்ர் தம்மை வணங்கு வித்தேன்.....
எனக்கு விடை தாரு" மேங்க்கேட்டான்"
திருமலை மன்னர் தடுத்தல்
"வீண்புகழி ராம நீ வீரியங்கள் பேசாதே
பண்டு முன்னாள் நஞ்சேனை பாருலகில்
கோரைவாய்க் காலதனில் கொள்ளையிட்டோம்..
வேண்டாங்கான் ராமா நீ வீரியங்கள் பேசாதே
இராமப்பையன் இனியும் கேட்டல்
"பட்டவாய் மதங்கள் பேசி மறவன் நிருபத்தை கண்டால்
கிழித்தெறிவேன் கச்சி திருமலேந்திரன்
தாடான்மை யாக அவன் வைத்த தானையும் முன்னாள் நஞ்சேனை முனைசமரில் வென்றதுவும்
இன்றளவுங்க கப்பங்க கட்ட திருந்ததுவும்
திருமுகத்தைத் தான் கிழித்த திறமுஞ் சமர்தறிய
அதற்கு நாயக்கன் விடை
"வாள் வீர ராம மன்னவனே நீ கேளாய்
கடும் பரியானையும் கனத்த பெருங்க் குஞ்சரமும்
அங்காரி சொல்லும் அருனா திரிதனையும்
தாங்காமல் நின்று சதிர்மானஞ் செய்தவன் காண்
இராமன் சொல்
"ஆண்டவனே இப்போ தடியேன் சொல் விண்ணப்பம் கேள்
பாளையக்காரரெல்லாம் பயந்து வணங்குவர் கான்
வணங்காமல் தானிருக்கும் வண்டமறவனையும்
வளைத்துப்பிடித்து வந்து வணங்க வைப்பேன் ஆண்டவனே
எனக்கு விடைதாருமய்யா!"
நாயக்கர் சொல்
"வேண்டாமடா ராம வீரியங்கள் பேசாதே
பண்டுமுன்னாள் நம்சேனை பாருலகு தானறிய
குழல்வாய்க்(பீரங்கி) கிரையாக கொள்ளைக் கொடுத்தோம்
யின்று பகைத்தால் எதிர்த்த மன்னர் தான் நகைப்பார்
சேதுக்கரை தனிலே சென்றவர்கள் மீண்டதில்லை
வாளுக்கு இரையிட்ட மறவன் வலுக்காரன்
துப்பாக்கி மெத்த உண்டான் தோலா மறவனுக்கு
தன்னரசு நாடு தனிக்கோட்டை யாளுவனாம்
மதுரைப் படையென்றால் மதியான் மறவனுந்தான்
மறவர்கள் சற்று மதியார் வடுகன் என்றால்
உன்னுடைய வாள் திறத்தை ஒருக்காலு மென்னுகாண்
வேண்டாமட ராம வீரயங்கள் பேசாதே
இராமய்யன் சொல்
"அரசர் பெருமானே ஆண்டவனே சொன்னீரே
பண்டு வடுகரென்று ப் ஆராமல் நின்றுரைத்தீர்
எங்கீர்த்தி தன்னை யிளிக்கேளு மாண்டவனே
வஞ்சனைகள் பண்ணுகிற மறவர்களெல்லாரும்
தஞ்சம் என்று வந்து சரணம் சரணம் என்பர். மைசூர் கோட்டைதனை மதியாமல் நானிடிப்பேன்
வங்காளம் கொங்கு மலையாள முள்ள தெல்லாம்
தாங்காம் லுன்பாதம் சரணம் பனியவைப்பேன்
கட்டத கப்பமெல்லாம் கட்டவைத்தே உன் அருளால்
மதுரை திருவாசலிலே வந்து பணிய வைத்தேன்
வையத்துள்ள மன்னர் மனு ராசக்கள்
"சென்ற மறவனிட செய்தியெல்லாம் பார்த்துவர
பண்டைப் படைவெட்டும் பார்த்துவர
போய்வாரேனென்ற புகழ்ராமனிப்பார்த்து
நாயக்கர் சொல்
வணங்காமுடி வேந்தன் வாகாய் சிரித்துரைப்பான்
"எப்படியோ வென்று யெண்ணி நினையாமல்
இல்லாத செய்தியெல்லாம் ஏனுரைத்தாய் ராமா நீ
முன்னமே தானிறந்த முனைவடுகர் பற்றாதோ
மறவனுடைய பூமியிலே மாள்வையென்று கற்றிலையோ"
"பெற்றார் பிறந்தார் பெயர்போன் நங்குலத்தார்
உற்றாருறன்முறையோருள்ள வடுகரெல்லாம்
பாளையக்காரர் படைத்தலைவரெல்லாரும்
வேளையதில் வென்றுவரும் வீரப் பரிவாரங்களும்
தொட்டியர் கம்பளத்தார் தோறாத சேவகரும்
சூரப்பையனை வெட்டிச் சூறையிட்டான் கண்டாயே
ஆங்காரியஞ் சொல்லும் அருணாத்திரிதனியும் பண்டு
வடுகர் படைத்தலைவரத்தனையும்
சதுரேறி வெட்டி சதிமானம் செய்தவன் காண்
சேதுக் கரை தன்னில் சேர யிறந்து விட்டார்
காட்டிலே வெட்டி கழுகுபசி தீர வைத்தான்
வெற்றி சங்கூதி விருது பறித்தவன் காண்
முன்னமே வெட்டி முணைகண்டான் மறவனுந்தான்
இந்நாளிலேதான் என்னேம் வடுகரென்றால்
வேண்டாங்கான் ராமய்யனே வீரியத்தை விட்டுவிடும்"
இராமய்யன் சொல்
தென்னவரே முன்னமே நம்சேனை முடிந்தார்களென் றுரைத்தீர்
மன்னவர்கள் மெத்த மடிந்தார்களென்றுரைத்தீர்
' அந்த மறவன் படும்பாடு கேளுமய்யா
"அரக்கர் குலத்தை அனுமாரறுத்தது போல்
மறக்குலத்தை நானும் மாய்த்து கருவருப்பேன்"
"வெட்டி சிறைபிடித்து வேந்தன் சடைக்கனையும்
கட்டிக் கொண்டுவருவேன் கர்த்தனே உன்பாதம்
போய்வாரேனய்ய பொருந்த விடை தாரு" மென்றான்
திருமலை மன்னர் விடை தந்து அனுப்புதல்
வணங்கா முடிவேந்தன் மனமகிழ்ந்து தான் சிரித்து
பல ஆபரனங்கள் தந்து மரியாதைகள் பல செய்து
சொக்கர் மீனாட்சி அருளாலே நல்லது நிறைவேற என அனுப்பி வைத்தான்.
முதலாவதாக தெலுங்கு படைகளை பொருத்தவரை அது தமிழ் மன்னை ஆக்கிரமித்து நிலைகொண்ட படை அந்நிய ஆக்கிரமிப்பு படை. மறவர் படையை பெருத்தளவில் தமிழ் மக்களின் காவல் உரிமையையை தங்களின் பிறப்புரிமையாக கொண்டவர்கள் மறவர்நாடு தங்களின் தாயகம் என்றும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மறவர்களின் புனிதமிக்க மன். போருக்கான காரணம் மறவர்களின் வாரிசுரிமை பிரச்சனையில் மதுரை தெலுங்கரான நாயக்க மன்னரை அனுகி உதவி கேட்ட ஒருவருக்காக உதவி செய்ய காரணம் காட்டப்படுகின்றது. அன்றை கிரித்துவ மிஷினரி பாதிரியார்களின் கடிதங்கள் தான் கிழக்கில் இருந்த மறவர் அரசு தெலுங்கு கூட்டமைப்பு முன் பனியாமல் இருந்ததாக தெளிவாக கூறுகின்றனர். போருக்கு அனுமதி கேட்கிறார் மதுரைப்படைத் தலைவரான ராமப்பைய்யன். திருமலை நாயக்கரோ "வேண்டாம் ராமா வடுகன் என்றால் மறவர்கள் மதிக்க மாட்டார்கள் மதுரை நாயக்க படை என்றால் மறவர்கள் மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கென்ற என்று தனிநாடு,கோட்டைகள் உண்டு மறவர்கள் தன்னரசு நாடு உடையவர்கள். மறவர்களுடன் போரிட்டு ஜெயித்தவர் யாரும் இல்லை சேதுக்கரைக்கு சென்றவர் மீண்டதில்லை வாளுக்கு இரையிட்ட வழுக்காரன் மறவன்" வீன் வசனங்கள் பேசாதே வேண்டாம் என மறுக்கிறார்.
மேலும் ஏற்கனவே நாம் மறவர்களோடு நடத்திய போர்களில் மறவர்களின் பீரங்கிகளுக்கும் வாளுக்கும் ஆயிரம் நமது படை வீரர்களை பலியாக கொடுத்துள்ளோம் ஏற்கனவே நமது படைகள் மறவ நாட்டில் பட்ட பாட்டையெல்லாம் மறந்துவிட்டாயா எனத்திருமலை நாயக்கர் கேட்கிறார்.
"அருனாத்திரி" என்ற படைதலைவரையும் அவருடன் சென்ற ஆயிரம் ஆயிரம் படைவீரர்களை மறவர்களிடன் பலிகொடுத்து தோல்வி மேல் தோல்வி பெற்று பின் வாங்கி ஒடிவந்ததை மறந்து விட்டாயோ என கேட்கிறார் இம்முறை கண்டிப்பாக மறவர்களை வெற்றி கொள்ள முடியும் என ராமப்பையன் தொடர்ந்து வற்புறுத்துகிறான். தெலுங்கு படைகளோ ஒரிசாவை,மராட்டியத்தை வென்றபடை மறவர்களை ஜெயித்து விடலாம். என வற்புறுத்துகின்றான். வேண்டா வெறுப்பாக திருமலை மன்னரின் அனுமதி கொடுக்கிறார்.
ஒரு லடசம் பேருக்கு அதிகமாக படைதிரட்டப்படுகின்றது. யார் கலந்து கொண்டார்கள் என ராமப்பையன் அம்மானை தெளிவாக விளக்குகிறது.பல்வேறு கூலிப்படைகள் ராமப்பையனால் திரட்டப்படுகின்றன மேலும் இலங்கையில் இருந்து போர்த்துகீசியர் ,சிங்கள படைகளும் திருமலை நாயக்கருக்கு உதவியாக வருகின்றன. படைகள் திருப்புவனம் வழியாக மானாமதுரை வந்து முகாமிடுகின்றன.அங்குள்ள காடுகளை வெட்டி கோட்டையை சீர்மைக்கின்றனர். ஒரு தூதுவனை போர் தூது சொல்ல அனுப்புகின்றனர்.தூதுவன் சேதுபதியிடம் செய்தியை கூறுகின்றான்சடைக்கன் உறைத்தல்
"ஆண்டவனே யிப்போது அடியேன் பயந்து வந்தேன்
என்று சொன்ன தூதுவனை யேறிட்டுத் தான்பார்த்து
ஒன்றுக்கு மஞ்சாதே உரையை இடு தூதுவனே
கச்சித்திருமலேந்திரனுக்கு கன்னான ராமய்யனும்
மானா மதுரையிலே வளைந்தடித்தான் கூடாரம்
கோடிக் குறுவெள்ளம் கொண்டுவந்து விட்டாற்போல்
இந்தப் பெருஞ்சேனை எங்கே யிருந்ததோ
கண்டு பயந்து வந்தேன் கர்த்தாவே அய்யாவே"
சடைக்கன் சீற்றம்
பூண்ட மணிமார்பன் புகழ்சடை காணும்போது
சீறுவடி வாளசைத்துஸ் சினந்தான் சடைக்கணுந்தான்
எறிந்துவிட்டு பம்பரம்போல் யிங்கே நீ வோடிவந்தாய்
முன்னால் நம்மாலே முண்டுவந்த மன்னரெல்லாம்
பரம்பக்குடி கோட்டையிலே பட்டன் தரிப்பரே
துப்பாக்கி தன்னாலே சூறையிட்டான் கண்டாயே
அறிந்திருந்தும் பார்ப்பான் அவன் படைதான் வந்ததேன்றால்
................................
பார்ப்பானை கண்ணை பிடுங்கி காட்டிலே யோட்டிடாமல்
என் பெயர் தான் சடைக்கனோ எடுத்ததுவு ஆயுதமோ
பின்குடுமி தன்னில் தேங்காயைக் கட்டி சிதற அடிக்காவிட்டால்
என்பேர் சடைக்கனோ எடுத்ததுவு மாயுதமோ
ராமநாதஸ்வாம் பூசைபண்ணு நல்லொதோர் பண்டாரமே
வாள்கோட்டைராயர்(சேதுபதி) வன்னியத்தேவனிடம் கூறுதல்
"எம்மருகா வன்னியரே யிப்புதமே கேட்கலையோ
மதியானவர்களை வாவென்று தானழைத்து
மக்கதிலானையெனும் மதப்புலியை தானழைத்து
சின்னாண்டி பெரியாண்டி சென்று சமர் வென்றவனே
வெண்ணிமாலை குமரா வீரா வாவென்று
சேதுக்கு வாய்த்த சேவகனே வாவென்று
வாதுக்குபடிவரும் மதுரை வழி கண்டவனே
கொண்டையங்கோட்டை மன்னவனே
செம்பி நாட்டிலுள்ள சேர்ந்த படை மன்னவனே
வீசுகொண்ட தேவனை அழைத்து
மங்கல நாட்டு வணங்காத மன்னவரே
குமாரன் அழகனையும் கூப்பிட்டு கிட்டவைத்து
கன்னன் கலியானி காவலனே வாருமென்று ராவுத்த
நரைபடை காவாளும் மாப்பிள்ளை வன்னியரே
வேங்கை புலியாரே வீரப் பரிவாரங்களை அழைத்து
மானா மதுரையில் சென்று சேருமின்
மறவர் பதில்
மதுச்சடைக்கன் தானுரைக்க மறவருமங்க் கேதுரைப்பார்
வீசு கொடை தேவன் வேந்தன் முகம் பார்த்து
பார்ப்பான் படையெடுத்தால் பறாமென்று சொன்னீரே
வந்த வடுகெரெல்லாம் மடிந்தார்களன்னாளில்
இந்த விசை வாரான் இவன் பிழைத்து போவேனோ
வாரபடை யத்தனையு மடியவே போர்டுவோம்
சூறையிட்டு சுத்தித் துணிபிடுங்கி வாரோமய்யா"
மறவர்களின் தரப்பிலோ சடையக்க சேதுபதிகளது மருமகனும் படைதலைவனான பட்டினம் காத்தான் வன்னிய தேவன் தன்னுடைய படைவீரர்களை அழைக்கிறார். வன்னியதேவனிடம் மறவர்கள் என்ன நினைக்கிறார்கள் என கேட்கிறார் மறவர் படையினரோ எந்த வித சமரசம் வேண்டாம் எனவும் தாங்கள் போரிட விரும்புவதாகும் தாங்கள் தலைவரிடம் தெரிவிக்கின்றனர். ஐந்து பெரும் படைதலைவர்கள் தலைமையில் மறவர் படைகள் யுத்தத்திற்கு தயாரகின்றன "மத்ததேவன் என்கிற ஒரு தளபதி இவர் பரமக்குடி அருகில் உள்ள கீழப்பெருங்கரை கிராமத்தை சேர்ந்தவர் என கருதப்படுகின்றது. இரண்டாவதாக உடையான் என்ற கருத்துடையான் என்ற தளபதி இவர் சிவகங்கை அரசர்களின் முன்னோரான பர்த்திபனூர் அருகில் இருக்கும் குளந்தாபுரி என்ற அருங்குளத்தை சார்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. அடுத்தாக வீசுகொண்ட தேவன் என்ற கொண்டையங்க் கோட்டை மறவர் தலைவர் தமது படைகலுடன் வருகிறார். ஐந்தாவதாக ஒரு தமிழ் இஸ்லாமிய தளபதி அவரது பேரும் இதில் குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் சேது மன்னர்கள் மீது மிகுந்த பற்று கொண்ட கன்னிராஜ புரம் கனிசேர்வை என்ற சேர்வை பட்டமுடைய தமிழ் முஸ்லீம் தளபதியாக இருந்தார். இது தவிர மதியழகன்,குமரத்தேவன் என்கிற இரண்டு தளபதிகள் பற்றிய குறிப்புகள் அம்மானையில் வருகிறது.இவர்களுடன் பெரும்படை பூதாலுடைய தேவர்,வெற்றிமாலையிட்டான், செறுவாறுடை சிங்கத்தேவர், பகழியூர் கூத்ததேவர்,வில்லை கொண்ட வேதமுடைய தேவர், வல்வேல் சத்த உடையான், நற்சோனை சேர்வைக்காரர்,பெரியசந்தனத் தேவர்,கூரி சாத்த பெரிய உடையன தேவர்கோட்டைசாமி தேவர்,திருக்கை உடையன தேவர்,கொம்மாயத்தேவர்,பகைவென்ற ஜெயக்கொடி தேவர். படைதளபதிகள் உள்ளனர். இப்போரில் மறவர்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தளபதி வன்னியத்தேவனின் பெரும் பேராற்றல் வெளிப்படுகின்றது. போருக்கு செல்லும் முன் பெண்கள் குலவையிடுகின்றனர். படைவீரர்கள் குளித்து அரச முறைப்படி சந்தனமிட்டு வேல் கம்பில் பூ கட்டி. சேதுபதி அரசரின் அரச விருந்து ஏற்பாடாகின்றது.
வன்னிய தேவன் சொல்
மட்டுப்படாத வன்னியன் மதம்பொழிந்து கொக்கரித்து
"கெட்டனோ பார்ப்பன் கீழ்திசை நோக்கிவந்து
பஞ்சாங்க சொல்ல வேறு இடமில்லையா
பூசைபண்ணித் தான் பிழைக்க பிள்ளையார்
தானில்லையோ
பார்ப்பனும் முன் வந்து தெரிபட்ட முதலிமார் சொல்லவில்லையோ
வடுகர்பட்ட பாடெல்லாம் மறந்தார்கள் மன்னவர்கள்
பார்ப்பானு மிதுதேசம் படையெடுக்க வந்தானோ
"பார்ப்பான் குடுமியில் தேங்காயை கட்டி யடிப்பேன் என்றான் கன்னன் புலி
வன்னியன்றான் "மார்பிலிடும் பூனூல் பறித்து மாட்டுவடம் போட்டிடுவேன்
ஆண்பிள்ளை சிங்கம் வன்னி அம்மான் முகம் பார்த்து
"வேண்டாம் மறவர் விசாரமினி வேண்டாங்காண்"
வங்கார மான வன்னி வாது சொல்லி தாம் மெழுந்து.
சேனை செல்கை
மற்றைநாள் தானும் மன்னன் புலி வன்னித்துரை
மதியாற்றழகனையும் மன்னன் குமாரனையும்
சின்னயாளியவுக்கு சேர்ந்த படை யத்தனையும் அரியாணிபுரக் கோட்டைக்கு அதிசீக்கிரத்தில் போகசொன்னான்
புயத்தையுடைவாள் போர்வேந்தன் தன்
படையும் வீசுகொண்ட தேவன் வீமன் பெரும்படையும்
புதுக்குடி கோட்டைய்க்கு போமென்று தாமுரைத்தார்
மதுரை வழிகண்ட மத்ததேவன் தன்படையும்
கறுத்த உடையான் கன்னன் பெரும்படையும்
ராவுத்த உடையான் காத்தன் நல்லபடைக்கு காவாளும்
போகலூர் கோட்டைக்கு போமென்று தானுரைத்தார்
வட்டாணதொண்டியில் வையுந்தன் தானியத்தை இளையாங்குடிக்கோட்டை யெச்சரிக்கை
மற்றநாள் தாண்தானும் மன்னன் புலிவன்னியவன் அரியானிபுறக்கோட்டை
அதிசீக்கிரம் போயிறங்கி கோட்டை புகுந்து கொத்தளத்து மேலேறி
யெதிரி படையை யேறிட்டு தான்பார்த்து
"எங்கே இருந்த்தடா இந்த பெரும்படை
கோடாங்கிக்காரன் வெள்ளமென கொண்டு வந்து விட்டனோ" என வன்னியத்தேவன் வீரியங்கள் பேசினான்.
முதல் நாள் சண்டை
இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிடவேண்டும். திப்பு சுல்த்தான் காலத்திலே இராக்கட் வெடி பயன்படுத்தபட்டது என சிலர் கூறுகின்றனர். ஆனால் திப்புசுல்த்தானுக்கு 300 வருடங்களுக்கு முன்பே இராக்கட்டை நம் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். மேலும் சேதுபதிகளின் மறவர் படையில் குழல்வாய் (பீரங்கி), துப்பாக்கி, எறிவாணம்(இராக்கட்) முதலிய நவீன ரக ஆயுதங்கள் பயன்படுத்தியுள்ளதாக போர்ச்சுகீசியர் மற்றும் அரசு ஆவன குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பார்ப்பான் படைமேலே பாருலகு தானறிய
எறிந்தார் எரிவாணம்(இராக்கட்) எல்லையற்ற சேனைமேல்
சுடரா க்குவைக்கார சொல்லரியா மன்னரைத்தான்
குத்தி விரட்டிக் கூடாரன் கொள்ளையிட்டார்
வெறுப்பட்டு குத்தி விரண்டோடிப் போவாரும்
குத்துண்டு போர்க்களத்தில் கொலவையிட்டு நிற்பாரும்
காலறுந்து வீழ்வாரும் கையறுந்து வீழ்வாரும்
குறைப்பிண்மாய் நின்று கூத்தாடி நிற்பாரும்
மன்னன் புலி வன்னியவன் வாகாகவே திரும்பி
வெற்றி சங்கூதினான் விருது சடைக்கனவன்
பார்ப்பன் பெரும்படையில் பட்டார்கள் முன்னூறு
மறவர் அறுபது பேர் மாண்டார் களத்திலே
தெலுங்கர் படைக்கு தலைமை ஏற்றவர்கள்
அந்தநாள் சென்று அலைகதிரோன் போய் மறந்தான்
பாளையக்காரர்களுக்கு அழைப்பு விடுமென கதறினான்
"மண்டூறு பார்ப்பானே வாருமென்று
நத்தத்து லிங்கையனும் நல்ல படையாலும்
கோடப்ப நாயக்கன் கூட்டப் பெரும்படையும்
வீரமலை நாய்க்கன் வேந்த பெரும்படையும்
எட்டப்ப நாயக்கன் எல்லையற்ற காலாளும்
தொட்டப்ப நாயக்கனும் தொறாத சேவகனும்
இருவப்ப நாயக்கன் யெதிரில்ல மன்னவனும்
பூச்சி நாயக்கன் போர்வேந்தன் தன்படையும்
முத்தைய நாயக்கன் போர்வேந்தன் தன்படையும் முருக்கு நாடு மூவரைய தேவன் படையும்
தெண்காஞ்சி மூக்கன் சிவிலிமாறன் படையும்
கோத மறுடி கோத்ஹ்ட பெரும்படையும்
குற்றால தேவன் கூட்டப் படையும்
தென்மலை வன்னியனும் சேனை தளமும்
கட்டபொம்மன் நாயக்கன் கனத்த சேனையும்
ஊற்றுமலையானும் உகந்த பெரும்சேனையும்
கீழ்முகத்து தும்பிச்சி நாயக்கனும்
மேல்முகத்து தும்பிச்சி விருதுபுகழ் காலாளும்
ஏழு மடையிலி வைப்பான் தன்படையும்
வென் நாயக்கனும் உற்ற புகழ் காவலாளும்
போருக்கு அதிகாரி பொம்ம நாயக்கன் படையும்
அப்பச்சி கவண்டன் ஆன பெரும்படையும்
ஏழாயிரம் பண்ணை எதிரில்லான் தன்படையும் கணக்கதிகாரி கவண்டன் பெரும்படையும்
நரிக்கு விருந்தாக்கும் நல்ல சிறுபொம்மனும்
முட்டிவெட்டி சூறையிடும் முத்தப்ப நாயக்கனும்
இருந்துமாந்து இலப்பையூர் நாயக்கனும்
பள்ளியில் சின்னையனும் பார்வேந்தன் தன்படையும்
ஆய்க்குடி கொண்டைய நாயக்கனும் விருப்பாச்சி நாயக்கன் வேந்தன் படையும்
கன்னிவாடி நாயக்கனும் கதித்த படை காலாளும்
லிங்கம நாயக்கன் நீதியுள்ளன் தன் படையும
பெருஞ்சேனை பெத்த நாயக்கன் அனைத்தும்
வாலப்ப நாயக்கன் வலுவுள்ளான் படையும்
வெங்கம நாயக்கன் காவலாளும்
விசுங்க நாடு விருது புகழ் காவலாளும்
செல்வப்பொட்டி நாயக்கன் சேனையும்
திருமலை பூச்சியனும் சேனைபடையரும்
சொக்கலிங்க நாயக்கன் தன்படையும்
மனலூறு நாயக்கன் வேந்தன் படையும்
வேலப்ப நாயக்கன் வேந்தன் படையும்
மருதப்ப தேவன் வேந்தன் படையும்
கோடாங்கி ரெட்டிக் குலைகளும்
மூங்கிலனை பூசாரி படையும்
பட்டத்து நாயக்கன் பரிவாரமும்
அரியலூரும் அவன் படைகளும்
வால சமுத்திரத்தின் மன்னன் படை தளமும்
குன்னத்து ரெட்டி குமரன் படையனைத்தும்
நாஞ்சில் நாட்டு துரையும்
மலையாள ராஜாவும் பார்வேந்தன் தன்படையும்
கொளும்பினில் ராசாவும் கூட்டு படையும்
ஈரோடுவொன்ன கொங்குமன்னரும்
நல்லம நாயக்கனும் நாகம நாயக்கனும்
கரட்டிமலை நாயக்கன் கனத்த பெரும்படை
கச்சைகட்டி நாயக்கன் காங்கேய நாடன் படையும்
என பெரும்படை திரள்கிறது.
புரோயன்சா பாதிரியார் குறிப்பில் "மறவர்கள் வெற்றிபெரும் நற்திறத்தோடு போரிட்ட வீரமக்கள்" என கூறுகிறார்.
ஒவ்வொரு கோட்டையை பிடிப்பதற்க்கு கோரயுத்தம் நடைபெறுகிறது. ஒரு அதிரடி தாக்குதலை மறவர் தளபதிகளான மதியழகனும்,குமாரத்தேவனும் மேற்கொள்ளும் பொருட்டு தெலுங்கு படைகளிடம் சிக்கிகொண்ட இருவரும் கொடூரமாக ராமப்பையன் கொலை செய்து விடுகிறார்.
யுத்தம் பாம்பன் கோட்டையில் நடக்கிறது, மானாமதுரையிலிருந்து இளையான்குடி கோட்டை, அரியானி கோட்டை (அரியாண்டிபுரம்) அத்தியூத்து, போகலூர், பாம்பன், குந்துக்கால், சேதுகரை, ராமேஸ்வரம் என ஆறு மாதங்கள் இந்த யுத்தம் நடக்கிறது.
முதலாவது போர் மானாமதுரைக்கு அருகில் உள்ள புதுக்கோட்டையில் நடைபெற்றதாக கருதப்படுகிறது.அரியானி என்ற ஊரில் தெலுங்கு கூட்டு படைகள் முழுவதுமாக மறவர்களால் சூறையாடப்படுகின்றது. 300 பேர்களுக்கு அதிகமாக தெலுங்கு படைகள் மடிகின்றனர். மறவர் தரப்பிலோ 60 மறவர்கள் இறந்தனர். தெலுங்கு படைகள் சிதறியடிக்கபடுகின்றனர். ராமப்பையைனோ தமது படைவீரர்களை மிரட்டி, மீண்டும் தூண்டி யுத்தத்தை தொடர்கிறான். மீண்டும் மதுரைப்படை சூறையாடப்படுகின்றது. இத்தோல்வியினால் சோர்வு அடைந்து விடாமல் இராமப்பையான் அரியாண்டிபுரக்கோட்டையை கைப்பற்றினான்.
இளையாங்குடி,அத்தியூத்து,அரியானி பாம்பன் என மறவர் நாட்டில் ஒவ்வொறு அடியில் யுத்தம் நடைபெற்றது. போகலூர் யுத்தத்தில் சேதுமன்னரான சடையக்க தேவரோ நேரடியாக போரிடுகிறார் மறவர்களின் மாமன்னருக்கு யுத்தத்தில் தோள்பட்டையில் வெட்டுகாயம் ஏற்படுகின்றது. தான் உயிருடன் இருக்கும் பொழுது தமது மைத்துனரும் அரசரான சடையக்கத் தேவருக்கு காயம் ஏற்பட்டதை என்னி வன்னியதேவன் கண் கலங்குவதாக அம்மானை கூறுகிறது.
மறவர் வளைகுடா என அழைக்கப்டும் பாக்ஜலசந்தியிலும், மன்னார் வளைகுடாவிலும் யுத்தம் நடைபெறுகிறது. மதுரை ராமப்பையனின் படைக்கு ஆதரவாக போர்ச்சுகீசியர்கள் போரிடுகின்றனர். ஐரோப்பிய கடற்படை தெலுங்கர்களுக்கு அதரவாக போரிட்டு மறவர்களால் கடற்போரில் சிதரடிக்கபடுகின்றது. கப்பல்களின் பெயர்களும் அம்மானையில் குறிப்பிடபடுகின்றது.
யுத்தத்தில் தோல்வி மேல் தோல்வி பெற்ற தெலுங்கு,கன்னட ஆக்கிரமிப்பு படையும் அவர்களின் கூலிப்படையுடன் தன்மான தமிழ் மறவர்களின் நாட்டை விட்டு ஓடுகின்றது. ஆறாயிரம் வருடங்களாக போரை மட்டும் தொழிலாக செய்து வந்த இனக்குழுவுக்கு முன் ஆனைகுந்தி நாட்டில் மாடு மேய்க்கும் தெலுங்கு மற்றும் கன்னட கூலிப்படையினரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. திருமலை நாயக்கர் ராமப்பையானை மதுரைக்கு அழைக்கிறார்.
மதுரைக்கு வந்த ராமப்பையன் மீண்டும் படை உதவிகள் பெற்று பெரும்படையுடன் ஒராண்டு கழித்து ராமேஸ்வரம் தீவை முற்றுகையிடுகிறார். இராமேஸ்வரத்தை முற்றுகையிடுவதற்காக இராமப்பையன் ஒரு பாலம் கட்ட திட்டமிடுகிறார்.புரானங்களில் சொல்லப்படும் சேது என்ற பாலத்தை புதிப்பதாக கதை கூறுகிறது. இதில் அவரது படை பாளையக்காரர்களுக்கு பிடிக்கவில்லை அதிலும் பலரை கல் சுமக்க வைத்து பாலத்தை கட்டுகிறார்.
வைசூரி கண்ட நிலையிலும் மாபெரும் படைத்தலைவனும் சேதுமன்னரின் மருகனுமான வன்னியத் தேவன் பாம்பன் முற்றுகை போரை வெற்றிகரமாக தகர்தெரிந்து உயிர்விடுகிறார். வன்னிய தேவனின் மனைவி கனவனுடன் உடண்கட்டை ஏறுகிறார்.
ராமப்பையன் நோய் வாய்பட்டு இறந்ததாகவும் விஷம் வைத்து கொல்லப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இருதரப்பிலும் பெரும் அழிவுகள் ஏற்படுகிறது.
வடநாட்டை சேர்ந்த இந்து மத துறவிகள் திருமலை நாயக்கரை சந்தித்து போரை நிறுத்தவும்,சடைக்கத் தேவனை சந்திக்கவும் ஏற்பாடு செய்கின்றனர். அப்போது நடந்த சந்திப்பில் திருமலைநாயக்கருடன் இராமப்பையன் இருக்கிறான் திருமலை நாயக்கரை மீறி அவனே அதிகாரமிடுகிறார். ஆத்திரம் கொண்ட ராமப்பையன் சடையக்க தேவனை சிறையில் அடைக்கபடுகிறார். இச்செய்தி மறக்குல மக்களை ஆத்திரம் கொள்ளச்செய்கிறது. ஆயிரக்கனக்கான மறவர்கள் தங்கள் விளைநிலங்களை துறந்து படைகளில் சேர்ந்து ஆவேசத்துடன் நாயக்கர்களின் காவல் அரண்களை தாக்குகிறார்கள் நாடெங்கும் வன்முறை வெடிக்குறது.
அப்போது, திருமால் சடைக்கத்தேவருக்குக் காட்சி கொடுத்தார். பூட்டியிருந்த கால் விலங்கு 'கலீரென தான் தெரித்து போனது'. அதை அறிந்த திருமலை நாயக்கரும் சடைக்கத்தேவரை அழைத்துவரச்செய்து அவரை மீண்டும் சேதுநாட்டுக்கு அனுப்பிவைத்தார்மறக்குல மக்கள் வெற்றி முழக்கமிடுகிறார்கள் ஆக்கிரமிப்பு படைகள் வெளியேறி ஓடுகிறது. சடைக்கத்தேவரும் இராமநாதபுரம் திரும்பி செங்கொல் நடத்தி மாயன் அருளால் மண்டலத்தை ஆண்டிருந்தார்.
இந்த செய்தி இயேசு சபைப் பாதிரிமார்களில்ன் கடிதங்களாலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.இரு படைகளும் கடல் சண்டைகள் நடைபெற்றதற்கான் ஆதாரங்கள் கூறுகின்றது. இந்த யுத்தத்தை தலைமை தாங்கி நடத்திய சடைக்க சேதுபதியின் மருகன் வன்னிய தேவன் குடும்பம் ராமநாதபுரம் அருகே பட்டினம் காத்தன் என்ற ஊரில் வசிக்கின்றனர். வன்னிச்சாமி தேவர்,ராமவன்னி எண்கின்ற பெயரை இன்றும் அந்த குடும்பத்தினர் பழமைமாறாமல் தங்கள் குழந்தைகளுக்கும் சூட்டுகின்றனர்.இரமநாதபுரம் காங்கிரஸ் தலைவர் ரவிசந்திர ராமவன்னி தேவர் இவர்களில் முக்கியமானவர்.எனது குறிப்பு:
ஆர்.சத்தியநாத ஐயர் மதுரை நாயக்கர்கள் வரலாறு, நெல்சன் மதுரை மானுவலும் இப்போரில் இராமப்பையன் இறந்ததாக கூறுகிறார்கள். ஆனால் ஸ்ரீசைலத்தில் 1648-ல் கானப்பட்ட ஒரு கல்வெட்டு இராமப்பையன் கல்வெட்டு என குறிப்பிடுகின்றது. இந்த தளபதி மறவர் போர் முடிவடைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு இறந்தார் என குறிப்புகள் வருகிறது
விசுவநாத நாயக்கன் ஜெயதுங்க தேவரோடு ஒரு போரும், திருமலை நாயக்கருடன் இரு போரும், சொக்கநாத நாயக்கனுடன் இருமுறையும் மங்கம்மள் மற்றும் ரங்ககிருஷ்ன நாயாக்கருடன் இரு போர்கள் நடைபெற்றது.
மதுரை தெலுங்கு கூட்டுபடைகளால் மறவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் மறவர்களோ தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யும் தமிழர்களின் உயரிய மான்பிற்கு ஏற்றவகையில் கன்னட படைகளை முறியடிக்க பேருதவி சொக்கநாதனை ருஸ்டம் கான் பிடியிலிருந்து முஸ்லீம் ஆக்கிரமிப்பை விடுவித்து மதுரையிலிருந்து அகற்றியது. தென்னாட்டு பாளையக்காரர்களை ஒடுக்கியது என மதுரை தெலுங்கர்களுக்கு நன்மையே செய்துள்ளனர்.
பங்காரு திருமலை நாயக்கரின் குடும்பம் நாட்டைவிட்டு நாடிழந்து ஓடிய போது திருப்பச்சேத்தி அருகே வெள்ளிக்குறிச்சியில் தங்கவைத்து திருமலை நாயக்கரின் வாரிசுக்கு நிலங்களை ஆதரித்தவர்கள் சிவகங்கை மன்னர்கள் தான். இவ்வாறு இராமப்பையன் அம்மானை கூறுகிறது.நன்றி:முத்துராஜா(வழக்கறிஞர்) அவர்கள்
நன்றி: தென்பாண்டி சிங்கங்கள்
No comments:
Post a Comment