Sunday, October 14, 2018

மாமன்னன் இராசராச சோழன்.

மாமன்னன் இராசராச சோழன் International Kallar Peravai
https://kallarperavai.weebly.com/29903006-299029853021298529853021-2951299230062970299230062970-297030153006299629853021.html

மா மன்னன் இராசராச சோழன் குறிப்புகள். (ஆய்வுக்குரியவை)
இயற்பெயர் - அருண்மொழித்தேவன் (அருண்மொழிவர்மன்)
பிறந்தநாள் - 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் .
கி.பி. 943 என்று பேராசிரியர் சி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு (பக்கம் 102) எனும் நூல் குறிப்பிடுகிறது. 
(உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடு)

இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் செப்புவதாக முனைவர் சூ. சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

சிறப்புப் பெயர்கள் - 42

1. இராசகண்டியன்
  2. இராசசர்வக்ஞன்
  3. இராசராசன்
  4. இராசகேசரிவர்மன்
  5. இராசாச்ரயன்
  6. இராசமார்த்தாண்டன்
  7. இராசேந்திரசிம்மன்
  8. இராசவிநோதன்
  9. இரணமுகபீமன்
10. இரவிகுலமாணிக்கன்
11. இரவிவம்சசிகாமணி
12. அபயகுலசேகரன்
13. அருள்மோழி
14. அரிதுர்க்கலங்கன்
15. பெரியபெருமாள்
16. அழகியசோழன்
17. மும்முடிச்சோழன்
18. பண்டிதசோழன்
19. நிகரிலிசோழன்
20. திருமுறைகண்டசோழன்
21. செயங்கொண்டசோழன்
22. உத்தமசோழன்
23. மூர்த்தவிக்கரமாபரணன் 
24. உத்துங்கதுங்கன்
25. உய்யக்கொண்டான்
26. உலகளந்தான்
27. தெலிங்ககுலகாலன்
28. கேரளாந்தகன்
29. மூர்த்தவிக்கரமாபரணன்
30. சோழேந்திரசிம்மன்
31. சோழநாராயணன்
32. சோழகுலசுந்தரன்
33. சோழமார்த்தாண்டன்
34. பாண்டியகுலாசனி
35. சிவபாதசேகரன்
36. சிங்களாந்தகன்
37. சத்துருபுஜங்கன்
38. சண்டபராக்ரமன்
39. ஜனநாதன்
40. சத்திரியசிகாமணி
41. கீர்த்திபராக்கிரமன்
42. தைலகுலகாலன்

தாய் தந்தையர் - வானவன் மாதேவி சுந்தரசோழன்
உடன் பிறந்தோர் - ஆதித்த கரிகாலன் (அண்ணன்) குந்தவை (அக்கை)
மனைவியர் - 15 
மக்கள்
இராசராச சோழனுக்கு இராசேந்திரன், எறிவலி கங்கைகொண்ட சோழன் என்னும் இரு ஆண்மக்களும், மாதேவடிகள், அருமொழி சந்திர மல்லியரான கங்காமாதேவியார், இரண்டாம் குந்தவை என்னும் மூன்று பென்மக்களும் இருந்தனர். எறிவலி கங்கைகொண்ட சோழன் இராசேந்திர சோழனின் தம்பியாவான். ( 30 கல்வெட்டுகள் பக்கம் 29,59. வை.சுந்தரேச வாண்டையார் கல்வெட்டு ஆராய்சிக் கலைஞர்.மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.)

இராசராச சோழனின் திருவுருவமும், கோப்பெருந்ட்தேவியின் திருவுருவமும் சிலைவடிவில் திருவிசலூர்க் கோவிலில் இருக்கின்றன.

அரியனை அமர்ந்தநாள் - ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985
(இராசராசன் கி.பி.985 ஜுன் 25ம் நாள் அரசு கட்டில் ஏறினான்)
ஆட்சி ஏற்ற வயது - 42ம் வயது
தஞ்சை பெரியகோயில் கட்டியது - ஆட்சியாண்டு 25, 275ம் நாள் சனிக்கிழமை
கும்பாபிசேசம் செய்த நாள் - 22/04/1010 (புனர்பூச நட்சத்திரத்தில்)
இறந்த நாள் - 17/01/1014 (ஆட்சியாண்டு 29, மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)
(இராசராசன் இறந்த தினம் - 17/01/1014. தனது ஆட்சியாண்டு 29ல் மார்கழி பூர்வ பட்சத்தில் சதுர்த்தசி திதியில் இயற்கை எய்தினார்)
முதல் திவசம் செய்தது - 6/01/1015 (1015 மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)
முதல் திவசத்தை 6/01/1015ல் பிண்டமளித்து, பின் எட்டு பொற்பூக்களை கேந்திர பாலதேவருக்கு திருவடி சாத்தி முதலாம் ராசேந்திரன் வழிபாடு செய்த இடம் திருவலஞ்சுழி அருகில் உள்ளது. இதற்குரிய கல்வெட்டும் அங்குள்ளது. இராசராச சோழனின் திருவுருவமும், கோப்பெருந்ட்தேவியின் திருவுருவமும் சிலைவடிவில் திருவிசலூர்க் கோவிலில் இருக்கின்றன.
வாழ்ந்த கால வயது - 71 ஆண்டுகள்
ஆட்சிச் காலம் - 28 ஆண்டுகள் 8 மாதங்கள் 29 நாட்கள்
முதலாம் இராஜராஜ சோழன். கி.பி 985 முதல் கி.பி 1014

இராசராச சோழன்
சோழர்களின்புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன்முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான்.சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகாலஉத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன்நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

இராசராச சோழனின் வயது அறிய உதவும் தகவல்கள்.
சுந்தர சோழனின் (ஆட்சிக் காலம் 957 முதல் 973 வரை) 2ம் மகன் இராசராச சோழன்.

இராசராச சோழனின் மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலன் கி.பி. 935 ஆண்டிலும் சகோதரி குந்தவை நாச்சியார் கி.பி.937 ஆண்டிலும் பிறந்தனர். இதன் மூலம் இராசராச சோழன் கி.பி. 937ம் ஆண்டுக்குப் பின் தான் பிறந்திருக்க வேண்டும் என்றும் அறியப்படுகிறது. ஆகவே இராசராச சோழனின் பிறந்த ஆண்டு 938 முதல் 946 வரையிலான காலமாக இருக்க வேண்டும். (973-938 = 35வயது) 
(973-946 =27வயது) 

ஆதித்த கரிகாலன் இளவரசு பட்டம் பெற்ற ஆண்டு கி.பி.966ம் ஆண்டு. (31வது வயதில்) 969 ம் ஆண்டு தன் 34 ம் வயதில் இறந்தான்.

இராசராச சோழனின் தந்தை சுந்தர சோழன் கி.பி.973ல் மரனம் அடைந்தான்.

இராசராசன் பிறந்த நட்சத்திரம் சதயம். ஐப்பசி திங்கள். (October - November)

சுந்தர சோழன் இறந்த பின் 12 வருடங்கள் கழித்து 985 ல் இராசராசன் ஆட்சி ஏற்றான் (973 + 12 = 985) இராசராசன் கி.பி.985 ஜுன் 25ம் நாள் அரசு கட்டில் ஏறினான்

அருள்மொழிவர்மன் என்ற பெயரை அரசு ஏற்ற 3வது ஆண்டில் (988) இராசராசன் என மாற்றிக்கொண்டான். (985 + 3 = 988)

இராசராசன் இலங்கையை கைப்பற்றிய ஆண்டு கி.பி 993

இராசராசன் அரியனை ஏறி 25 வருடங்கள் கழித்து 275ம் நாள் பெரிய கோவில் கட்டிமுடிக்கப்பட்டது. (985 +25 = 1010 மற்றும் 275 நாட்கள்)

பெரிய கோவில் 1003ல் துவங்கி 6 ஆண்டுகளில் கட்டி முடிவுற்றதாகவும் தகவல் உண்டு.

இராசராசன் இறந்த வருடம் கி.பி.1014. 
இராசராசன் இறந்த தினம் - 17/01/1014. தனது ஆட்சியாண்டு 29ல் மார்கழி பூர்வ பட்சத்தில் சதுர்த்தசி திதியில் இயற்கை எய்தினார்
முதல் திவசத்தை 6/01/1015ல் பிண்டமளித்து, பின் எட்டு பொற்பூக்களை கேந்திர பாலதேவருக்கு திருவடி சாத்தி முதலாம் ராசேந்திரன் வழிபாடு செய்த இடம் திருவலஞ்சுழி அருகில் உள்ளது. இதற்குரிய கல்வெட்டும் அங்குள்ளது.

இராசராச சோழனின் மகன் இராஜேந்திரசோழன் தனது 25ம் வயதில் இளவரசு பட்டம் பெற்றான்.

இராஜேந்திர சோழன் ஆட்சிப்பொருப்பை கி.பி. 1012 முதல் தந்தையுடன் பகிர்ந்து கொண்டான்.

இராஜேந்திர சோழன் கி.பி 1044ல் இறந்தான்

மேற் காட்டிய குறிப்புகள் மூலம் இராசராசன் பிறந்த வருடம் கி.பி 938 முதல் 950 வரை இருக்கலாம்

உத்தம சோழன் 973 முதல் 985 வரை 
தந்தை (சுந்தர சோழன்) இறந்ததும் ஆட்சி ஏற்றிருந்தால் இராசராச சோழனின் வயது (950) 23 தான் இருந்திருக்கும். சக்கரவர்தியாக ஆட்சி ஏற்க குறைந்தது 30 வயதாவது இருந்திருக்க வேண்டும். ஆகவே இராசராச சோழனின் பிறந்த ஆண்டு 938 முதல் 943 வரையிலான காலமாக இருக்க வேண்டும். (973-950 = 23) (973-938 = 35) (973-943 =30)

இராசராச சோழன் கி.பி. 938ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 76 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 47 ஆட்சி ஆண்டுகள் 29. 47+29= 76)

இராசராச சோழன் கி.பி. 939ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 75 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 46 ஆட்சி ஆண்டுகள் 29. 46+29= 75)

இராசராச சோழன் கி.பி. 940ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 74 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 45 ஆட்சி ஆண்டுகள் 29. 45+29= 74)

இராசராச சோழன் கி.பி. 941ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 73 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 44 ஆட்சி ஆண்டுகள் 29. 44+29= 73)

இராசராச சோழன் கி.பி. 942ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 72 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 43 ஆட்சி ஆண்டுகள் 29. 43+29= 72)

இராசராச சோழன் கி.பி. 943ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 71 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 42 ஆட்சி ஆண்டுகள் 29. 42+29= 71)

இராசராச சோழன் கி.பி. 944ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 70 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 41 ஆட்சி ஆண்டுகள் 29. 41+29= 70)

இராசராச சோழன் கி.பி. 945ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 69 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 40 ஆட்சி ஆண்டுகள் 29. 40+29= 69)

இராசராச சோழன் கி.பி. 946ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 68 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 39 ஆட்சி ஆண்டுகள் 29. 39+29= 68)

இராசராச சோழன் கி.பி. 947ம் ஆண்டு பிறந்திருந்தால் இறந்தபோது வயது 67 ஆக இருந்திருக்கும். (அரியனை ஏற்ற வயது 38 ஆட்சி ஆண்டுகள் 29. 38+29= 67) தந்தை சுந்தரசோழன் இறந்தபோது இராசராச சோழனுக்கு (973-947 = 26) வயது 26 ஆக இருந்திருக்கும்

சோழமண்டலம்.
தொன்மைக் காலத்திலிருந்தே சோழநாடு என்றிருந்த பெயர் இராசராசன் காலத்தில்தான் முதன் முதலில் சோழமண்டலம் என்று அழைக்கப்பட்டது. சோழமண்டலம் எனும் பெயர் கி.பி. 1009 முதல் அழைக்கப்பட்டது என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. 

குடும்பம்.
இராஜராஜன் பல மனைவியருடன் வாழ்ந்தாலும், குறைந்த அளவிலான மக்களைப் பெற்றிருந்தான். பல கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இவனது மனைவிமார்கள் ஏறக்குறைய பதினைந்து ஆயினும் உலக மகாதேவி என்று அழைக்கப்பட்ட தந்திசக்தி விடங்கி என்பவளே பட்டத்தரசியாக விளங்கியவள். இராஜராஜ சோழனின் ஆட்சியின் 29ம் ஆண்டில் திருவிசலூரில் இம்மன்னனுடன் இருந்தாள், திருவிசலூர்க் கோயிலில் இம்மன்னன் துலாபாராம் புகுந்த பொழுது தந்திசக்தியும் இரணிய கர்ப்பம் புகுந்தாள். இராஜராஜனின்  மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள்.

1. உலக மகாதேவி 
2. சோழ மகாதேவி
3. அபிமானவல்லி மகாதேவி
4. திரைலோக்கிய மகாதேவி
5. பஞ்சவன்மகாதேவி
6. பிருத்திவிமகாதேவி
7. இலாடமகாதேவி
8. மீனவன் மகாதேவி 
9. வானவன் மகாதேவி 
10. வில்லவன் மகாதேவி
11. வீரநாராயனி. 
12. தில்லை அழகியார்
13. காடரம் தொங்கியார்
14. இங்கோன் பிச்சியார்
15. தைலாமாதேவி

மாமன்னன் முதல் இராசராச சோழன் காலத்து சோழமண்டல வள நாடுகள்.
1. அருண்மொழித் தேவ வளநாடு
2. உய்யக்கொண்டான் வளநாடு
3. இராசராச வளநாடு
4. நித்திவிநோத வளநாடு
5. இராசேந்திர சிங்க வளநாடு
6. இராசாசிரய வளநாடு
7. கேரளாந்தக வளநாடு
8. சத்திரிய சிகாமணி வளநாடு
9. பாண்டிகுலாசனி வளநாடு

உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு.
இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.
இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள்

1. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்)
2. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்)
3. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்)
4. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி)
5. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - பெல்லாரி மாவட்டம்)
6. மலை மண்டலம் (திருவாங்கூர் - கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி)
7. மும்முடிச் சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - சேலம் மாவட்ட வடபகுதி)
9. வேங்கை மண்டலம் (கிருட்டின - கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட கீழைச் சாளுக்கிய நாடு)

இராசராச சோழன் போர் வெற்றி கண்ட நாடுகள்.
01. காந்தளூர் ( திருவனந்தபுரம்)
02. விழிஞம்
03. பாண்டிய நாடு
04. கொல்லம்
05. கொடுங்கோளூர்
06. குடமலை நாடு (குடகு)
07. கங்கபாடி (கங்கநாடு)
08. நுளம்பபாடி
09. தடிகைபாடி (மைசூர்)
10. ஈழநாடு (இலங்கை)
11. மேலைச்சாளுக்கிய நாடு
12. வேங்கை நாடு
13. சீட்புலி நாடு
14. பாகி நாடு
15. கலிங்க நாடு
16. பழந்தீவு பன்னீராயிரம் ( மாலைத்தீவுகள்) 

இராஜராஜன் காலத்து வாரியங்கள்

கிராம சபைகள் நிர்வாக வசதிக்கு ஏற்ப, பல வாரியங்களை கொண்டன. அவ் வாரியங்களின் பணிகள் ஊர்களின் தன்மைக்கு ஏற்ப அமைந்திருந்தன.சில ஊர்களில் சம்வுத்சர வாரியம் என்ற் ஒன்றே கிராமத்தின் அனைத்துப் பணிகளையும் கவனித்து வந்தது.பொதுவாக வாரியங்கள் ஊர்மக்களின் நலத்தையும் அறநிலையங்களியும் பாதுகாத்து வந்ததோடு மட்டுமின்றி ஏரி,கிண்று,ஊருணி, வாய்க்கால் போன்ற நீர் நிலைகளையும் செப்பனிட்டுப் பாதுகாத்து வந்தன. அரசுக்குஸ் சேரவேண்டிய வரிகளையும் மக்களிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்தி வந்தன.கல்வெட்டுகளின் மூலமாக கீழ்க்காணும் வாரியங்கள் இருந்தமையாகத் தெரியவருகின்றது.

1. நில வாரியம்
2. நீர் வாரியம்
3. ஏரி வாரியம்
4. தோட்டவாரியம்
5.பொன் வாரியம்
6. பஞ்ச வாரியம்
7. கழனி வாரியம்
8. களைக்கு வாரியம்
9.களிங்கு வாரியம்
10. தடிவழி வாரியம்
11. குடும்ப வாரியம்
12. சம்வுத்சர வாரியம்

உலகளந்தான் கோல்.
சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராசன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறைச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.

எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு அசாதாரண பணி, இதனை மிகவும் சீரிய முறையில் சாதித்த சோழராஜனின் மகுடத்தில் இந்த அரிய பணி ஒரு வைரம்.

உலகளந்தான் கோல் பற்றிய சில விவரங்கள்.
24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு
25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்
33” ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு முழமாகும்.

வரிவிதிப்பு முறை
சோழப் பேரரசன் இராஜராஜன் ஆட்சிக்காலத்தில் அரசின் வருமானத்தைப் பெருக்கிட வரிவிதிப்பு முறையை வகுத்துக் கையாண்டு ஆட்சிபுரிந்தான். 
1. ஊரில் பொதுவாக வைக்கப்பெற்றிருந்த ஓர் எடையைப் பற்றியவரி (ஊர்க்கழஞ்சு),
2. முருகன் கோயிலுக்காகச் செலுத்திட வேண்டியவரி (குமர கச்சாணம்)
3. மீன்பிடி உரிமைக்கான வரி (மீன் பாட்டம்)
4. சிறுவரிகள் (கீழிறைப்பாட்டம்)
5. குளத்து நீரைப் பயன்படுத்துவோருக்கான பாசனவரி (தசபந்தம்)
6. பொன் நாணயம் அரசன் அச்சடிப்பதற்கான வரி (மாடைக்கூலி)
7. நாணயத்தின் பொன்மாற்று அளவை ஆய்வதற்கான வரி (வண்ணக்கக் கூலி)
8. பொருள்களை விற்பனை செய்வதற்கான வரி (முத்தாவணம்)
9. மாதம்தோறும் செலுத்த வேண்டிய வரி (திங்கள் மேரை)
10. நிலத்துக்கான வரி (ஒருவேலிக்கு இவ்வளவு என வேலிக்காசு அல்லது வேலிப் பயறு)
11. நாட்டின் நிருவாகச் செலவுக்கான வரி (நாடாட்சி)
12. கிராம நிருவாகச் செலவுக்கான வரி (ஊராட்சி)
13. நன்செய் நிலத்திற்கான நீர்ப்பாசனவரி (வட்டி நாழி)
14. வீட்டுவாசற்படிக்கான வரி (பிடா நாழி அல்லது புதாநாழி)
15. திருமணம் செய்தால் செலுத்த வேண்டிய வரி (கண்ணாலக்காணம்),
16. துணி துவைக்கும் கல்லுக்கான வரி (வண்ணாரப்பாறை)
17. மண்பாண்டம் செய்வதற்கான வரி (குசக்காணம்)
18. தண்ணீர்வரி (நீர்க்கூலி)
19. நெசவாளர் தறிக்குத் தரவேண்டிய வரி (தறிப்புடவை அல்லது தறிக்கூரை)
20. தரகர்கள் தரவேண்டிய வரி (தரகுபாட்டம்)
21. பொற்கொல்லருக்-கான வரி (தட்டார் பாட்டம்)
22. ஆடுகளுக்கானவரி (ஆட்டுவரி)
23. பசு, எருதுகளுக்கான வரி (நல்லா அல்லது நல்லெருது)
24. நாட்டின் காவலுக்கான வரி (நாடுகாவல்)
25. ஊடு பயிர் சா-குபடி செய்தால் வரி (ஊடுபோக்கு)
26. ஆவணப் பதிவுக்கான வரி (விற்பிடி)
27. வீட்டு மனைக்கான வரி (வாலக்காணம்)
28. சுங்கவரி (உல்கு)
29. ஓடங்களுக்கான வரி (ஓடக்கூலி)
30. நீதிமன்றவரி (மன்றுபாடு)
31. அரசனுக்குச் சேரவேண்டிய தனிவரி (மாவிறை)
32. கோயிலில் வேள்வி நடத்துவதற்கு வரி (தீயெரி)
33. கள் இறக்க வரி (ஈழம் பூட்சி)

என்று பட்டியல் நீளும்வகையில் வரிபோட்டவர் இந்த மாமன்னர் என்று கே.கே. பிள்ளை எழுதுகிறார். (படிக்க: தமிழக வரலாறு  மக்களும் பண்பாடும்). அரசனால் விதிக்கப்பட்ட வரிகளும் கட்டணங்களும் 400 க்கும் மேற்பட்டவை எனக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

பேராட்சி முறையில் மன்னனுக்குத் துணை செய்த அலுவலர்கள்.
1. உத்திர மந்திரி
2. பெருந்தர அதிகாரிகள்
3. திருமந்திர ஓலை
4. திருமந்திர ஓலை நாயகம்
5. ஒப்பிட்டுப் புகுந்த கேள்வி
6. வரியிலிடு
7. காடுவெட்டி
8. உடன் கூட்டத்து அதிகாரி
9. அனுக்கத் தொண்டன்
10. நடுவிருக்கை
11. விடையில் அதிகாரி
12. உள்வரி திணைக்களத்துக் கண்காணி
13. புரவரித் திணைக்களம்
14. புரவரி திணைக்களத்து நாயகம்
15. வரிப் பொத்தகம்
16. முகவெட்டி
17. வரிப்பொத்தகக் கணக்கு
18. வரியிலிடு புரவரி திணைக்களத்து நாயகம்
19. கடமை எழுதுவோன்
20. பட்டோலை
21. ஸ்ராகாரிய ஆராய்ச்சி

சோழர்கால கப்பல்கள்.
கடல் கடந்து வாணிகத்திலும், ஆதிக்கத்திலும் கோலோச்சிய சோழர்கள் நீர்ப்போக்குவரத்திலும் சிறந்து விளங்கினர். இதோ கி.பி. 9 - 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் என்னும் நூல் குறிப்பிடும் கப்பலின் பெயர்கள்.
1. வங்கம்
2. பாடை
3. தோணி
4. யானம்
5. தங்கு
6. மதலை
7. திமில்
8. பாறு
9. அம்பி
10. பாரி
11. சதா
12. பாரதி
13. நௌ
14. போதன்
15. தொள்ளை
16. நாவாய்

சோழர் கால துறைமுகப்பட்டினங்கள்.
  1. பழவேற்காடு.
  2. சென்னப்பட்டினம்
  3. மாமல்லை.
  4. சதுரங்க்கப்பட்டினம்
  5. வசவ சமுத்திரம்
  6. மரக்கானம்
  7. கடலூர்
  8. பரங்கிப்பேட்டை
  9. காவேரிப்பூம்பட்டினம்
  10. தரங்கம்பாடி
  11. நாகப்பட்டினம்
  12. முத்துப்பேட்டை
  13. தொண்டி
  14. தேவிப்பட்டினம்
  15. அழகங்குளம் (மருங்கூர்ப்பட்டினம்)
  16. இராமேசுவரம்
  17. பெரிய பட்டினம்
  18. குலசேகரப்பட்டினம்
  19. தூத்துக்குடி
  20. கொற்கை
  21. காயல்பட்டினம்
  22. குமரி.
சோழர் கால ஏரிகள்.
  1. செம்பியன் மாதேவிப் பேரேரி - கண்டராதித்தம்
  2. மதுராந்தகம் ஏரி- மதுராந்தகம்
  3. பொன்னேரி - ஜெயங்கொண்டம்
  4. வீரநாராயண பேரேரி- வீராணம்
  5. திரிபுவனப் பேரேரி - திரிபுவனம் (பாண்டிச்சேரி)
  6. வீரசிகாமணிப் பேரேரி- அல்லூர்
  7. திரிபுவன மாதேவப் பேரேரி - புத்தூர்
  8. கவீர ஏரி (கவிநாடு ஏரி) - புதுக்கோட்டை
பொன்னேரி. ஜெயங்கொண்டம்.
கங்கை கொண்ட சோழபுரம் - ஜெயங்கொண்டம் சாலையில்,கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து 2கி.மீ தொலைவில் மேற்கே அமைந்துள்ளது பொன்னேரி. இது கங்கை வரை சென்று வெற்றி பெற்றதன் அடையாளமாக முதலாம் இராஜெந்திர சோழனால் அமைக்கப்பட்ட ஏரியாகும். இதில் தான் கொண்டு வந்த கங்கை நீரையும் ஊற்றி கங்கை நதி போல் என்றும் நீர் வற்றாது இருக்கவேண்டும் என்ற நோக்கில் இராஜராஜன் இவ்வேரியை நிர்மாணித்துள்ளான் ( திருவாலங்காடு செப்பேடு குறிப்பிட்டுள்ளது) இங்குந்டத்தப்பட்ட அகழாய்வில் மதகின் மேல்பகுதியில் செங்கற்கட்டிடமும், கரைப்பூச்சும்,செங்கற்களுக்கிடையில் சுண்ணாம்புக் கரைப் பூச்சும் காணப்பட்டுள்ளன.

இராஜராஜன் தந்த தஞ்சைப் பெருங்கோவில்.



பெரிய கோயில் என்று சிறப்பு பெயரோடு அழைக்கப்படுகிறது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில். இதன் சிறப்புகளைப் பற்றி அறிவோம்.

இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது.
thanjavur big temple wikimedia க்கான பட முடிவு


கோயிலைக் கட்டும் எண்ணம் வந்த விதம்
காஞ்சிபுரத்தில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் ராஜராஜனின் மனதை மிகவும் கவர்ந்தது. அக்கோயிலை “”கச்சிப்பேட்டுப் பெரியதளி” என்று போற்றி மகிழ்ந்தார். இக்கோயிலின் அமைப்பு அவருக்குள் உணர்ச்சிப் பெருக்கையும், பக்தியையும் ஏற்படுத்தியது. தானும் ஒரு சிவாலயத்தை அமைக்கவேண்டும் என்ற எண்ணத் தில், தஞ்சாவூரில் பெரியகோயில் திருப்பணியைத் தொடங்கினார். காஞ்சி கயிலாயநாதர் கோயிலைப் பார்த்ததன் விளைவே, தஞ்சைப் பெரிய கோயில் கட்டப் பட அடித்தளமாக அமைந்தது.

கிபி 1004'ல் துவங்கி ஆறே ஆண்டுகளில் கட்டிமுடித்த ஆச்சரியம் தஞ்சை பெரிய கோயில். இந்த கோயிலுக்கு ராஜராஜன் வைத்த பேர் ராஜராஜேஸ்வரம்.பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. பிறகு மாராத்தியர்கள் ஆண்ட போது அது பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பேர் பெற்றது. ( பிரகதீஸ்வரர் என்பது சமிஸ்கிருதப் பெயர் ). இன்று அதை நாம் தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கிறோம்.

இ‌து ம‌ன்ன‌ன் க‌ட்டிய ‌கோயி‌ல் எ‌ன்றாலு‌ம் ம‌க்களு‌க்கானதாக இரு‌ந்த‌து. ம‌க்க‌ள் ‌போ‌ர்‌க்கால‌ங்களி‌ல் அ‌டை‌க்கல‌ம் ‌தேடுகிற இடமாகவு‌ம், ம‌க்களி‌ன் கு‌றை தீ‌ர்‌க்கிற இடமாகவு‌ம், ம‌க்க‌ள் விழா எடு‌க்கு‌ம் இடமாகவு‌ம், ம‌க்க‌ள் க‌ல்வி க‌ற்கு‌ம் இடமாகவு‌ம் திக‌ழ்‌ந்திரு‌க்கிற‌து. கி‌ட்ட‌த்த‌ட்ட இ‌ன்‌றைய ம‌க்கள‌வையாக ‌பெரிய ‌கோயி‌ல் திக‌ழ்‌ந்த‌து.இ‌க் ‌கோயி‌ல் ம‌க்களி‌ன் புகலிடமாக இரு‌ந்த‌து ம‌ட்டும‌ல்ல, ம‌ன்ன‌ன் ராஜராஜ‌ன் ‌பொறி‌த்த ஒரு க‌ல்‌வெ‌ட்டு ‌சொ‌ல்லு‌ம் ‌செ‌ய்தி பிரமி‌ப்பான‌து. "இ‌ந்த‌க் ‌கோயி‌லை ம‌க்க‌ள் பா‌துகாக்க ‌வே‌ண்டு‌ம். என‌க்கு‌ப் பி‌ன்னா‌ல் இ‌ந்த‌க் ‌கோயி‌லை‌க் காப்பவ‌ர்களி‌ன் காலி‌ல் நான் இ‌ப்‌போ‌தே விழு‌ந்‌து ‌தொழுகி‌றே‌ன்' எ‌ன்று எழுதி ‌வை‌த்திரு‌க்கிறா‌ன். ஆக, ம‌க்களு‌க்காக அ‌ர்‌ப்பணி‌த்த ‌கோயி‌ல் இ‌து எ‌ன்று ‌சொ‌ல்லலாம். 

( Dinamani Deepavali Malar - 2010. தமி‌ழ்ப் ப‌ல்க‌லைக்கழக‌த்தி‌ன் மு‌ன்னா‌ள் ‌து‌ணை‌வே‌ந்த‌ர் ஒ‌ள‌வை நடராச‌ன்"ராஜரா‌ஜே‌ச்சர‌ம்' நூ‌லை‌த் த‌ந்த மு‌னைவ‌ர் குடவாயி‌ல் பாலசு‌ப்ரமணிய‌ம். "ஒ‌ள‌வை நடராச‌ன் இ‌ல்ல‌த்தி‌ல்' நிகழ்த்திய சு‌வையான உ‌ரையாடலி‌ன் ‌தொகு‌ப்பு..)

பிரம்மாண்ட நந்தி.
தஞ்சாவூர் கோயில் என்றாலே அங்குள்ள விமானமும், நந்தியும் தான் எல்லார் நினைவிலும் வரும். ஒரே கல்லினால் செய்யப்பட்ட மிகப் பெரிய நந்திகளுள் இதுவும் ஒன்றாகும். (திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ள கல்நந்தி தஞ்சாவூர் நந்தியை விடப் பெரியது. தமிழகத்தின் மிகப்பெரிய நந்தியும் இதுதான்) திருச்சி அருகிலுள்ள பச்சைமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த நந்தி 25 டன் எடை உடையது. 19 அரை அடி நீளம், எட்டேமுக்கால் அடி அகலம், 12 அடி உயரம் கொண்டது. விஜயநகரக் கலைபாணியில் அழகும், கம்பீரமும் கொண்டு அமைந்துள்ள இந்த நந்தி தஞ்சை நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டதாகும். நந்தி, நந்தி மண்டபம் ஆகியவற்றை கி.பி., 17ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களான அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவ நாயக்கர் ஆகியோர் உருவாக்கினர். இவர்களது சிலைகள் இந்த மண்டபத் தூண்களில் உள்ளன. நந்தி மண்டபத்தின் மேல் விதானத்தில், மூன்றாம் சிவாஜி மன்னர் காலத்தில் பூக்களும், பறவைகளும் வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டன.

கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டதே! இவ்வளவு பெரிய கோயிலுக்கு நந்தி சற்றுச் சிறியதாக இருக்கிறதே! என்று கருதிய நாயக்க மன்னர்கள், ராஜராஜசோழன் வைத்த நந்தியை அப்புறப்படுத்திப் புதிய நந்தியை வைத்தார்கள். முந்தைய நந்தி, பிராகாரத் துக்குள் தெற்குப் பக்கம் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருப்பதை இன்றும் நாம் காண முடியும். 

நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசைநோக்கியபடி உள்ள நந்தியே ராஜராஜன் காலத்தைச் சேர்ந்ததாகும். இதுவே முதலில் பெருவுடையாருக்கு  எதிரில் இருந்தது. பின்னாளில் நாயக்கர்கள் மூலவருக்கு இணையான பெரிய நந்தியை  நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி, கேரளாந்தகன் மற்றும் ராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்தது. பிற்காலத்தில் திருச்சுற்று மாளிகைக்கு மாற்றப்பட்டது.

பெரியகோயிலின் கோபுரத்தில் முதல் மாடியில் நாலாபுறமும் நாட்டிய சாஸ்திரத்தில் பரதமுனி குறிப்பிட்ட பரதநாட்டிய முத்திரைகளை சிவபெருமான்  ஆடிக் காண்பிப்பது போன்ற சிற்பங்கள் ராஜராஜசோழன் காலத்தில் செதுக்கப் பட்டன. மொத்தம் 108 சிற்பங்கள். அவற்றில் 81 சிற்பங்களை மட்டுமே சிற்பிகள் முடித்து, மிச்சத்தை அப்படியே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். ஏன்? காரனம் தெரியவில்லை.

மழைநீர்சேகரிப்புத் திட்டம்.
மழைநீர்சேகரிப்புத் திட்டத்துக்கும் ராஜராஜ சோழனுக்கும் சம்பந்தம் உண்டு என்றால் ஆச்சரியப் படுவீர்கள். மழைநீர் சேகரிப்பை முதன் முதலில் செயல்படுத்திய மன்னர் ராஜராஜசோழன்தான்! பெரியகோயிலில் விழும் மழைநீரை துளியும் வீணாக்காமல் அப்படியே கோயிலுக்கு அருகிலுள்ள சிவகங்கை குளத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்காகத் தரைக்கடியில் பெரிய குழாய்கள் போடப்பட்டன (இன்றும் அவற்றை நாம் காணலாம்). தவிர, தஞ்சாவூரிலுள்ள சேவப் பன்னவாரி என்னும் ஏரி மழைக்காலத்தில் நிரம்பிய பிறகு, அந்த நீர் வீணாகாமல் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத்துக்கு வாய்க்கால் மூலம் கொண்டுசெல்லப் பட்டு, வடிகட்டப்பட்ட பிறகு, அங்கிருந்து எல்லாத் தெருக்களுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்ட ராஜராஜ சோழன், அவருக்கு பிரமாண்டமாக கோயில் அமைக்க நினைத்தான். அதன்படி எழுந்ததுதான் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில். இந்த கோயில் கட்டுவதற்கு வெளிமாநிலங்களில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டது.

கி.பி. 1004ல் கோயில் கட்டும்பணி ஆரம்பமாகி ஆறே ஆண்டுகளில் சிறப்பாக முடிந்து கி.பி. 1010ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பொதுவாக ராஜகோபுரம் உயரமாகவும், மூலஸ்தான விமானம் உயரம் குறைத்தும் கட்டப்படுவது வழக்கம். சோழர்களின் கட்டடக்கலை முறைப்படி, ராஜகோபுரம் சிறிதாகவும், விமானம் பெரிதாகவும் கட்டப்படுவது மரபாக இருந்தது. அதுபோல், தஞ்சாவூர் கோயில் விமானம் 216 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டது.

தலைசிறந்த கட்டடக்கலை வல்லுனர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் விமானம் தமிழகத்திலேயே மிக உயரமானது. அதன் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ளது. இந்த கல்லை விமானத்தின் உச்சிக்கு கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் அருகிலுள்ள சாரபள்ளம் என்ற ஊர் (50 கி.மீ.)வரை மணல் கொட்டி, பாலம் போல் அமைத்து, யானைகளைக் கொண்டு, பிரம்ம மந்திரக் கல்லை கட்டி இழுத்து கொண்டு போய் கோபுரத்தின் உச்சியில் வைத்தார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தார்களாம். இக்கோயிலின் அமைப்பைப் பார்த்து, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கட்டடக்கலை வல்லுனர்கள் வியப்பின் உச்சிக்குச் செல்கின்றனர்.

லிங்கங்களில் மிகப் பெரியது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம். இதனாலேயே இக்கோயில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுவதுண்டு.
உலகின் பெரிய லிங்கம்
கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப் பெரியதாகும். ஆறு அடி உயரமும் 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும் 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனிக் கருங்கற்களினால் செதுக்கப் பட்டு இணைக்கப் பட்டுள்ளது. நாம் தரிசனத்துக்கு செல்லும் போது, நம் பார்வையில் படுவது லிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக, ஆராதனைகளுக்கு வசதியாக இரு புறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன.  தஞ்சைக் கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகம அடிப்படையில் செய்யப்படுகிறது. இக்கோயிலில் தினமும் காலை சந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த ஜாமம் என நான்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. சிவலிங்கத்தைச் சுற்றி வர கருவறையைச் சுற்றி இடமும் உள்ளது.  அதில்  சோழர்கால ஓவியங்கள்  வரையப் பட்டுள்ளன. தஞ்சாவூர் பெரிய கோயில் மூலவரை பிரகதீஸ்வரர் என்றும், அம்பாளை பெரியநாயகி என்றும் அழைப்பர். இங்குள்ள வாராகியை வழிபட்டால் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.

மூலவர் பிரகதீஸ்வரர் அம்மன் பெரியநாயகியுடன் அருள் செய்கிறார். சிவலிங்கத்தில் பாணத்தின் உயரம் 12.5அடி. சுற்றளவு 23 அடி. ஆவுடையார் 55 அடி சுற்றளவு. இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் உடுத்தும் வேட்டியின் நீளம் 35 மீட்டர். பக்தர்கள் வஸ்திரம் சாத்த விரும்பினால், இதற்கென ஆர்டர் கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்ய லிங்கத்தின் இருபுறமும் படிக்கட்டுகளுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது அடி உயரமுடைய அம்மன் பெரியநாயகி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருளுகிறாள்.

சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராஹிக்கு சன்னதி உள்ளது. கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. சப்த மாதாக்களில் பிரதானமானவள் வாராஹி. ராஜராஜ சோழன் இந்த அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து விட்டுத்தான் எந்தச் செயலையும் ஆரம்பிப்பான்.

இத்தலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் ராஜராஜ சோழன் விழா, இந்த அம்மனுக்கு பூஜை செய்த பின் தான் தொடங்குகிறது.

திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.

பெரிய நந்தி.
இங்குள்ள நந்தி 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 9 அடி அகலம், 25 டன் எடையுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இதை அமைப்பதற்காக திருச்சி அருகிலுள்ள பச்சைமலையிலிருந்து கல் கொண்டு வரப்பட்டது.

மூலவர் சன்னதியின் பின்புறம் கருவூர் சித்தருக்கு சன்னதி உள்ளது. கருவூர் சித்தர் இப்பகுதியில் தியானத்தில் இருந்துள்ளார். இவரது அறிவுரைப்படியே ராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. தஞ்சை பெயர்க்காரணம்: புராண காலத்தில் தஞ்சகன், தாரகன், தண்டகன் என்ற மன்னர்கள், தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற வரத்தை சிவனிடம் பெற்றிருந்தனர். இதனால் தேவலோகம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி அதிகாரம் செலுத்தினர். வரம்பு மீறிய இவர்களின் செயல்கண்ட சிவன், திருமாலையும், காளியையும் அனுப்பி அவர்களை வதம் செய்தார். இருப்பினும், சிவபக்தர்களாக இருந்த அவர்களது பெயர் விளங்கும்படியாக, தஞ்சகனின் பெயரால் தஞ்சாவூரும், தாரகனின் பெயரால் தாராசுரமும், தண்டகனின் பெயரால் தண்டகம்பட்டு என்ற ஊரும் உருவானது.

பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதற்கு நிர்வாக அலுவலராக இருந்த ஆதித்தன் தென்னவன் மூவேந்த வேளாளன் என்பவர் ராஜராஜ சோழனுக்கும் அவரது மனைவி லோகமாதேவிக்கும் செம்பில் உருவச் சிலைகள் செய்தார். ராஜராஜ சோழன் உயிருடன் இருக்கும் போதே செய்யப்பட்ட இச்சிலைகள் இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கெளதம் சாராபாய் தனியார் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராஜராஜசோழன் மறைந்த பிறகு, அவருடைய வெண்கலச்சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. அதை, பிரகதீஸ்வரர் வீதி உலா செல்லும்போது முன்னால் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் ராஜேந்திர சோழர். பயபக்தியோடு, கைகூப்பியவாறு இருக்கும் இந்தச் சிலையும் தற்போது வடக்கே சாராபாய் மியூஸியத்தில் இருக்கிறது. இச் சிலைகளை மத்திய அரசின் உதவியோடு தமிழக அரசு மீண்டும் தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து, தஞ்சை கோயிலில் வைக்கவேண்டும். (தற்போது இச்சிலைகளை மீட்டுக் கொண்டு வந்து தஞ்சை பெரிய கோவிலில் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன.)

.


தஞ்சைப் பெரியகோயில் கட்டிட கலைஞர்கள் (சிற்பிகள்). 
1. இராசராசசோழன்
2. வீரசோழன் குஞ்சரமல்லன் ( ராசராசப் பெருந்தச்சன் என்ற கட்டிட கலைஞன் )
3. மதுராந்தகன் நித்தவினோதப் பெருந்தச்சன் ( இரண்டாம் நிலை கட்டிட கலைஞன் )
4. இராசராசசோழனின் தமக்கை குந்தவை பிராட்டியார்
5. இலத்தி சடையனான் ( கண்டராதித்த பெருந்தச்சன் - இரண்டாம் நிலை கட்டிட 
    கலைஞன் )
6. ஈசான சிவபண்டிதர் எனும் ராசகுரு
7. இராசராசசோழனின் மகன் இராசேந்திரசோழன்
8. இராசராசசோழனின் ராசகுரு சர்வசிவபண்டிதர்
9. சேனாதிபதி கிருட்டிணன் இராமன் ( மும்முடிச்சோழன் பிரமமாராயன் )
10.தென்னவன் மூவேந்த வேளன் எனும் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனார் 
    ( கோயில் நிர்வாக அதிகாரி)
11. பவனபிடாரன் (சைவ ஆச்சாரியார் தலைமைக் குரு )

உலகின் முதல் பொற்கோபுரம்.
தட்சிணமேரு என்னும் தஞ்சை பெரிய கோயில் விமானம் முழுவதும் செப்புத்தகடுகளைப் போர்த்தி அதன்மேல் பொன் வேய்ந்தான் ராஜராஜன் என்று கல்வெட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன.  216 அடி விமானம் முழுவதும் தங்கத்தகடு வேய்ந்ததைஒட்டக்கூத்தர்  தக்கயாகப்பரணியில் குறிப்பிட்டுள்ளார். தட்சிணமேருவான தஞ்சை ராஜராஜேஸ்வரத்தை எப்படி ராஜராஜன் பொன்மயமாக அமைத்தானோ, அதுபோல, தில்லை நடராஜர் கோயில் விமானத்தை குலோத்துங்கன் அமைத்தான் என்ற செய்தி சிதம்பரம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.  பிற்காலத்தில் நிகழ்ந்த படையெடுப்புகளில் இந்த விமானத்தில் வேய்ந்த பொன் முழுவதும் சூறையாடப்பட்டு விட்டது.

கேரளாந்தகன் வாயில் கோபுரம்.
பெரியகோயிலின் கோபுரங்களில் உயரமானது கேரளாந்தகன் வாயில் கோபுரம். ராஜராஜன் கி.பி.,988 ம் ஆண்டு சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனைப் போரில் வெற்றி பெற்றதைப் போற்றும் வகையில் இக்கோபுரத்திற்குக் “”கேரளாந்தகன் வாயில் கோபுரம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்கோபுரம் 90 அடி உயரமும் 54 அடி அகலத்தில் ஐந்து நிலையுடன் அமைந்துள்ளது. கோபுரத்தின் நிலைக்கால்கள் ஒவ்வொன்றும் நான்கு அடி நீளம், மூன்று அடி அகலம், 40 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆனவை. கோபுரத்தின் நாற்புறங்களிலும் நாயக்கர் மற்றும் மராட்டியர் காலச் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுரத்தை ஒட்டிச் செல்லும், சிவகங்கைக் கோட்டை உள்மதில், செவ்வப்ப நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.

ராட்சத மதில்சுவர்.
கோயிலை சுற்றி சுமார் 28 அடி உயரத்தில் அமைந்துள்ள மதில் ராஜராஜனின் தலைமை அமைச்சரான சோழ மண்டலத்து உய்யக் கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு அமன்  குடியான கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்து கிருஷ்ணன் ராமன் என்னும் மும்முடிச் சோழ பிரம்மராயன் என்பவரால் மன்னனின் ஆணைப்படி கட்டப்பட்டது. மதிற்சுவர் மீது வரிசையாக நந்தி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மதிற்சுவரின் வெளிப்புறத்தின் கீழ்பகுதியில் சோழர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கிழக்கு மேற்காக 800 அடி நீளமும், தெற்கு வடக்காக 400 அடி அகலமும் கொண்டுள்ளன. கோயிலின் பிரகாரச் சுற்றில் கருங்கற்களினாலும், செங்கற்களினாலும் தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி கி.பி., 1803ல், தளம் அமைத்தார்.

பாரம்பரியச் சின்னமானது எப்படி?
கி.பி. 1987ல் யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக தஞ்சைப் பெரியகோயிலை அறிவித்தது. இதன் மூலம் இக்கோயிலின் பெருமை உலகத்தின் பலநாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. மனிதமரபினை, பண்பாட்டினைப் பறைசாற்றும் கலைப்பொக்கிஷமாகத் திகழும் இக்கோயிலைக் காண நாள்தோறும் வெளிநாட்டவர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். இக்கோயிலை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கான காரணங்கள்.
1.பொதுவாக பெரிய கோயில்களை பலகாலம் பல மன்னர்கள் கட்டுவர். ராஜராஜன்
ஒருவனாலேயே எழுப்பப்பட்ட முழுமையான பிரம்மாண்ட கோயில் இது.
2. ஒரே தன்மையான செந்நிறக்கற்களால் அமைந்த திருக்கற்றளி கோயிலாக அமைந்தது. (கற்களால் ஆன கோயில்களைக் கற்றளி என்பர்)
3. கருவறைக்கு மேலே உயரமான விமானம் அமைத்தது மாறுபட்ட அமைப்பாக இருந்தது.
4. புவியீர்ப்பு மையத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.
5. ராஜராஜசோழன், தானே கோயில் கட்டியதற்கான ஆதாரத்தை கல்வெட்டில் பொறித்ததோடு மட்டுமல்லாமல், எந்தெந்த வகையில் பொருள் வந்தது என்பதையும், கோயிலுக்கு யார் யாருடைய பங்களிப்பு, கும்பாபிஷேகம் நடத்திய வரலாறு ஆகியவற்றை கல்வெட்டில் பொறித்துள்ள தகவல்கள்.
6. கற்றளியால் அமைந்த விமானம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டது.
7. தஞ்சைப் பெரிய கோயில் ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல. இது தமிழக வரலாறு, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் பெட்டகமாகத் திகழ்கிறது.

இராஜராஜன் காலத்திய கோயில்கள்.
(புதிதாக கட்டப்பட்டயைகளும், புதுப்பிக்கப்பட்டவைகளும்)
  1. பெரிய கோயில். (இராஜராஜேஸ்வரம்) தஞ்சாவூர்
  2. லோகமகா தேவீஸ்வரம் திருவையாறு
  3. ஷேத்திரபாலர் கோயில். திருவலஞ்சுழி
  4. உத்திரபடீஸ்வரர் கோயில். அழாத்திரிபுத்தூர்
  5. திருராமநாததீஸ்வரம் கோயில். திருச்செங்காட்டங்குடி
  6. அமிர்தகடேஸ்வரர் கோயில். திருக்கடையூர்
  7. கதரேரணஸ்வாமி கோயில். திருக்காரவாசல்
  8. பாரிஜாதவனேஸ்வரர் கோயில். திருக்கலூர்
  9. திருமலைக்கடம்பூர் கோயில். நார்த்தமலை
  10. திருநெடுங்கல்ஸ்நாதசுவாமி கோயில். திருநெடுங்கலம்
  11. சாம்வேதீஸ்வரர் கோயில். திருமங்கலம்
  12. குந்தன்குழி மகாதேவர் கோயில். மதகடிப்பட்டு
  13. பூமீஸ்வரர் கோயில். மரக்காணம்
  14. கயிலாயத்துப் பரமேஸ்வரன் கோயில். உலகாபுரம்
  15. அரிஞ்சகை விண்ணகர் கோயில். உலகாபுரம்
  16. சுந்தரசோழப் பெரும்பள்ளி கோயில். உலகாபுரம்
  17. மகாசாஸ்தா கோயில். அகரம்
  18. திருவாலந்துரைஉடைய பரமசிவன் கோயில். ஏமப்பேரூர்
  19. பிரம்மபுரீஸ்வரர் கோயில். பிரம்மதேசம்
  20. ராஜராஜ விண்ணகரம். எண்ணாயிரம்
  21. திருஇராமேஸ்வரம் கோயில். ஈசாலம்
  22. ரவிகுல மாணிக்கேஸ்வரர் கோயில் தாதாபுரம்
ராஜ ராஜ சோழன் பற்றிய முழுவிபரம் யாரும் பதிவுசெய்யவில்லை அல்லது கிடைக்கவில்லை. ஆனால் அவரும் மேட்டுக்குடி மக்களுக்கே ஆதரவு தந்தார், அவ்ர்கள் ஆலோசனையில் தான் அவன் அரசாங்கம் நடந்தது. ஆனால் யாவரும் தன் தாயின் நினைவாய், தந்தையின் நினைவாய் தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தில் அணையா தீபம் ஏற்றிக்கொள்ளலாம் என்ரோர் ஆணை பிறப்பித்தான் ஆனால் ஒரு நிபந்தனை விதித்தான்.

சந்திரசூரியர் உள்ளவரை அந்த அணையா விலக்கு ஒளிவிடவேண்டுமென்றால்.அதற்காக 96 ஆடுகலைக் கோயிலுக்கு கொடையாக கொடுத்துவிட வேண்டும். அந்த ஆடுகலை இசாவா மூவாப் பேராடு' என்கிரது கல்வெட்டு. அந்த ஆடுகள் ஏழை ஒருவனிடத்தில் தரப்பட்டு அவன் அதி பாராமரித்து அந்த என்னைக்கு ஆகும் செலவை கட்ட வேண்டும்.

சோழர் கால கல்வெட்டுக்களில் மாதங்கள்.
  1. மேச ஞாயிறு - சித்திரை மாதம்
  2. ரிசிப ஞாயிறு - வைகாசி மாதம்
  3. மிதுன ஞாயிறு - ஆனி மாதம்
  4. கடக ஞாயிறு - ஆடி மாதம்
  5. சிம்ம ஞாயிறு - ஆவணி மாதம்
  6. கன்னி ஞாயிறு - புரட்டாசி மாதம்
  7. துலா ஞாயிறு - ஐப்பசி மாதம்
  8. விருச்சிக ஞாயிறு - கார்த்திகை
  9. தனுர் ஞாயிறு - மார்கழி மாதம்
  10. மகர ஞாயிறு - தை மாதம்
  11. கும்ப ஞாயிறு - மாசி மாதம்
  12. மீன ஞாயிறு- பங்குனி மாதம்
மாளிகைகளின் பட்டியல் 
மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தன் மனைவியர்கட்கு தஞ்சை அரண்மனையில் அமைத்துக் கொடுத்த மாளிகைகளின் பட்டியல்.
1. உய்யக்கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளம்
2. அபிமான பூஷணத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
3. ராசராசத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
4. பஞ்சவன் மாதேவி வேளம்
5. உத்தம சீலியார் வேளம்
6. அருண்மொழித் தெரிந்த பரிகலத்தார் வேளம்
7. புழலக்கன் பெண்டாட்டி அவினிசிகாமணி கீழவேளம்
8. தஞ்சாவூர் பழைய வேளம்
9. பண்டி வேளம்

சோழர் கால இலக்கண நூல்கள்.
தண்டியலங்காரம்
நன்னூல்
நேமிநாதம்
புறப்பொருள் வெண்பாமாலை
யாப்பெருங்கலம்
வீரசோழியம்
வெண்பாப் பாட்டியல்
சோழர் கால நிகண்டு
பிங்கலந்தை

இராஜராஜ சோழன் காலத்து புலவர்கள்
1. கருவூர்த் தேவர்
2. கண்டராதித்த சோழர்
3. திருமாளிகைத் தேவர்
4. சேந்தனார்
5. பூந்துருத்தி ந்ம்பிகாடர் நம்பி
6. வேணாட்டடிகள்
7. திருவாலிய முதனார்
8. ப்ருசோத்தம நம்பி
9. சேதிராயர்
10. நெற்குன்றவாணர்
11. நம்பிகாளி.

அங்காடிகள் 
மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தஞ்சை மாநகரில் அமைந்திருந்த அங்காடிகள்.
1. திருபுவன மாதேவி பேரங்காடி
2. வானவன் மாதேவி பேரங்காடி
3. கொங்காள்வார் அங்காடி
4. இராசராச பிரும்ம மகாராசப் மாதேவி பேரங்காடி

தஞ்சைத் தெருக்கள் பட்டியல் 
இராசராசன் தனது கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ள தஞ்சை மாநகர தெருக்கள் பட்டியல்.
01. வடக்குத் தனிச்சேரி
02. தெற்குத் தனிச்சேரி
03. கொங்காள்வார் அங்காடி
04. ரெளத்ர மாகாளத்து மடவளாகத்தெரு
05. பிரமகுட்டத்து தெரு
06. ஜய பீமதளித் தெரு
07. ஆனைக்காடுவார் தெரு
08. பன்மையார் தெரு
09. வீர சோழப் பெருந்தெரு
10. இராசராச வித்யாதரப் பெருந்தெரு
11. வில்லிகள் தெரு
12. மடைப்பள்ளித் தெரு
13. சயங்கொண்ட சோழப் பெருந்தெரு
14. சூர சிகாமணிப் பெருந்தெரு
15. மும்முடிச் சோழப் பெருந்தெரு
16. சாலியத் தெரு
17. நித்தவிநோதப் பெருந்தெரு
18. வானவன்மாதேவிப் பெருந்தெரு
19. வீரசிகாமணிப் பெருந்தெரு
20. கேரள வீதி 

“தமிழக வரலாற்றில் மட்டுமல்லாமல் இந்திய வரலாற்றில் பெருமையாக கருதப்படுபவர் மாமன்னன் இராஜராஜசோழன். கி.பி.985ல் முடிசூடி 1014-வரை பொற்கால ஆட்சி புரிந்த மாமன்னன் இராஜராஜசோழன் தனது வெற்றிகளாலும், இன்றும் உலகமே வியக்கும் தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் சிவன் கோவிலை கட்டி வரலாற்றில் இடம் பெற்றுள்ளான்.

இராசராசன் இறந்த தினம்
17/01/1014. தனது ஆட்சியாண்டு 29ல் மார்கழி பூர்வ பட்சத்தில் சதுர்த்தசி திதியில் இயற்கை எய்தினார் முதல் திவசத்தை 6/01/1015ல் பிண்டமளித்து, பின் எட்டு பொற்பூக்களை கேந்திர பாலதேவருக்கு திருவடி சாத்தி முதலாம் ராசேந்திரன் வழிபாடு செய்த இடம் திருவலஞ்சுழி அருகில் உள்ளது. இதற்குரிய கல்வெட்டும் அங்குள்ளது. இராசராச சோழனின் திருவுருவமும், கோப்பெருந்ட்தேவியின் திருவுருவமும் சிலைவடிவில் திருவிசலூர்க் கோவிலில் இருக்கின்றன.

No comments:

Post a Comment