Thursday, October 18, 2018

திரைப்பாடலில் ராகங்கள் ஜெயமோகன்

திரைப்பாடலில் ராகங்கள்

ஜெயமோகன்  February 20, 2009

எனக்கு மிகவும் தெரிந்த இசை விற்பன்னர்  என்றால் தமிழிசை ஆய்வாளரான நா.மம்முதுதான். அவரை நான் வேத சகாய குமாருடன் இணைந்து விரிவான பேட்டி எடுத்தேன். சொல்புதிதில் அப்பேட்டியுடன் ஒரு தமிழிசை மலர் தயாரித்து வெளியிட்டோம்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஒரு விழாவுக்காக நான் சென்றபோது கூட என் நண்பர் சுரேஷ் கண்ணன் வந்திருந்தார். அங்கே  நா.மம்முது  என்னைப்பார்க்க வந்திருந்தார். பொதுவான உரையாடல் ராகங்களை நோக்கி திரும்பியது. ஒரு கட்டத்தில் அபூர்வமான ராகங்களைப்பற்றி சுரேஷ் கண்ணனிடம் நா.மம்முது கேட்டு குறிப்புகளை எடுக்க ஆரம்பித்தார்.சுரேஷ் இசையில் குறிப்பாக கர்நாடக இசையின் ராக அமைப்புகளில் நிபுணர் என்று நான் அறிவேன். எப்போதும் என்னிடம் அவர் இசையைப்பற்றியே பேசுவதுண்டு. ஆனால் அப்போது எனக்கு அது ஆச்சரியம் அளித்தது. அந்த ஆச்சரியம் மெல்ல மெல்ல நீங்கியது.
பாலுமகேந்திராவின் உதவி இயக்குநராக இருந்த சுரேஷ் கண்ணன் என் வாசகராக அறிமுகமானவர். பின்னர் என்னை அவர்தான் பாலாவுக்கு அறிமுகம் செய்துவைத்து நான் கடவுள் வாய்ப்பு வாங்கிக்கொடுத்தார். அதன் பின் நெருக்கமான நண்பராக ஆகி இப்போது அனேகமாக தினமும் இருமுறை நான் ·போனில்பேசும் நண்பராக இருக்கிறார்.
இப்போது அவர் சுகா ஆரியா தயாரிப்பில் ஒரு படம் இயக்கும் ஆரம்பகட்ட பணிகளில் இருக்கிறார். உற்சாகமான ஒரு படமாக அது அமையும். சுகா இளையராஜாவின் தீவிரமான ரசிகர். நானும்தான். ஆனால் அது குத்துமதிப்பாக பாட்டைக்கேட்டு வந்த ரசனை. ஆனால் சுகா இளையராஜாவின் பாடல்களில், பாடலிடை இசையில், பின்னணி இசையில் உள்ள ஒவ்வொரு சிறு நுட்பத்தையும் துல்லியமாக அடையாளம் கண்டு ரசிப்பவர். அப்படி கேட்கும்தோறும்  அவருக்கு இளையராஜா பக்தி மேலும் அதிகரிக்கிறது.

சுகா இப்போது கிட்டத்தட்ட ஜென்ம சாபல்யம் அடைந்திருக்கிறார். இளையராஜா  சுகாவின் படத்துக்கு இசை அமைக்கிறார். கிட்டத்தட்ட நாளின் பெரும்பகுதியை அவர் இளையராஜாவுடன் செலவிடுகிறார். நானும் சென்னையில் இருந்தபோது இரண்டு நாட்கள் இளையராஜாவுடன் இருந்து அவரது இசையமைப்பைக் கண்டேன். அது தொழில்நுட்பம் வழியாக உயர்கலை உருவாகி வரும் ஓர்  அனுபவம். எப்போதுமே தீவிரம் ஒளிவிடும் இளையராஜாவின் முகம் ஓர் அழகிய ஓவியம் போல.
சென்னையில் இருந்தபோது சுகாவின் மடிக்கணினி என்னிடம் அகப்பட்டது. என் மடிக்கணினி பழுதானதால் இரண்டுநாளைக்கு இரவல் வாங்கியிருந்தேன்.அதில் அவர். கதாநாயகி தேர்வுக்கு ஒளிப்பதிவுசெய்து வைத்திருந்த அழகிகளை வேடிக்கைபார்த்தபோது அவர் சும்மா எழுதி வைத்திருந்த ஒரு குறிப்பு கண்ணில்பட்டது. திரைப்பாடல்களின் கர்நாடக சங்கீத ராகங்களை அவர் பட்டியலிட்டிருந்தார். எனக்கு உதவுமே என்று எடுத்து வைத்துக்கொண்டேன்.
பின்னர் இன்னொரு நண்பரிடம் பேசும்போது அவர் ”தர்பாரி கானடாவில் இந்த சினிமா பாட்டு இருக்கே…” என்றார். நான் உடனே கணிப்பொறியை திறந்து ”ஆமாமா…இன்னும்கூட ரெண்டு பாட்டு இருக்கே…”என்று ஆரம்பித்தேன். நாலைந்து ‘பஞ்ச்’ களுக்குப் பின் நண்பர் அதிர்ச்சி விலகி ”என்ன ஆயிற்று?”என்றார். நான் மெல்ல இந்த பட்டியலைச் சொன்னேன். உடனே பிரதி அனுப்பு என்றார். பின்னர் ”இந்த பட்டியலை பிரசுரித்தால் எல்லாருக்கும் உதவியாக இருக்குமே”என்றார். சுகா ஒப்புக்கொள்ளமாட்டார். இதெல்லாம் எதுக்கு என்பார். ஆகவே நானே பிரசுரிக்க முடிவுசெய்தேன்
சுகா போன்ற இசை விற்பன்னர்கள் திரைக்குள் இருப்பது ஒரு அபூர்வமான விஷயம். 2011 க்குள் ஒரு மகத்தான இசைப்படத்தை சுகா உருவாக்குவார் என்று நான் எண்ணுகிறேன்.
சுகா வலைப்பூ ஒன்று எழுதுகிறார். வார்த்தை இதழில் அவரது நகைச்சுவைக் கட்டுரைகள் வந்துகொண்டிருக்கின்றன.

http://venuvanamsuka.blogspot.com/



1. சுத்தஸாவேரி
மலர்களில் ஆடும் இளமை – கல்யாணராமன் – இளையராஜா
சுகம் சுகமே – நான் போட்ட சவால் – இளையராஜா
கோயில்மணி ஓசை தன்னை – கிழக்கே போகும் ரயில் – இளையராஜா
மணமகளே – தேவர்மகன் – இளையராஜா
2. கெளரிமனோஹரி
மலரே குறிஞ்சி மலரே – டாக்டர் சிவா – எம்.எஸ்.வி.
கெளரிமனோஹரியைக் கண்டேன் – மழலைப்பட்டாளம் – எம்.எஸ்.வி.
பாட்டும் நானே – திருவிளையாடல் – கே.வி.எம்.
முத்தமிழ் கவியே வருக – தர்மத்தின் தலைவன் – இளையராஜா
பொன்வானம் பன்னீர் தூவுதே – இன்று நீ நாளை நான் – இளையராஜா
கண்ணா வருவாயா – மனதில் உறுதி வேண்டும் – இளையராஜா
தூரத்தில் நான் கண்ட – நிழல்கள் – இளையராஜா
அதிகாலை நிலவே – உறுதிமொழி – இளையராஜா
கவிதை  அரங்கேறும் நேரம் – அந்த 7 நாட்கள் – எம். எஸ்.வி.
சோலைப்பூவில் மாலைத்தென்றல் – வெள்ளை ரோஜா – இளையராஜா
செம்மீனே செம்மீனே – செவ்வந்தி – இளையராஜா
3. கல்யாணி
நதியில் டும் பூவனம் – காதல் ஓவியம் – இளையராஜா
நிற்பதுவே நடப்பதுவே – பாரதி – இளையராஜா
சிறு கூட்டுலே – பாண்டி நாட்டுத் தங்கம் – இளையராஜா
வந்தாள் மஹாலக்ஷ்மியே – உயர்ந்த உள்ளம் – இளையராஜா
நான் என்பது நீயல்லவோ – சூரஸம்ஹாரம் – இளையராஜா
மஞ்சள் வெயில் – நண்டு – இளையராஜா
4. தர்பாரி கானடா
ஆகாய வெண்ணிலாவே –  அரங்கேற்ற வேளை – இளையராஜா
இசை மேடையில் – இளமைக் காலங்கள் – இளையராஜா
கல்யாண தேனிலா – மெளனம் சம்மதம் – இளையராஜா
5. ரீதிகெளளை
தலையைக் குனியும் தாமரையே – ஒரு ஓடை நதியாகிறது – இளையராஜா
சின்னக் கண்ணன்  அழைக்கிறான் – கவிக்குயில் – இளையராஜா
6. ஸரஸாங்கி
மீனம்மா மீனம்மா – ராஜாதி ராஜா – இளையராஜா
தா தந்தன கும்மி கொட்டி – அதிசயப்பிறவி – இளையராஜா
மல்லிகையே மல்லிகையே – பெரிய வீட்டுப் பண்ணக்காரன் – இளையராஜா
7. சாருகேஸி
சிறிய பறவை – அந்த ஒரு நிமிடம் – இளையராஜா
டல்கலையே – ஸ்ரீராகவேந்திரர் – இளையராஜா
தூது செல்வதாரடி – சிங்காரவேலன் – இளையராஜா
மயங்கினேன் சொல்லத்தயங்கினேன் – நானே ராஜா நானே மந்திரி – இளையராஜா
மணமாலையும் மஞ்சளும் சூடி – வாத்தியார் வீட்டுப்பிள்ளை – இளையராஜா
காதலின் தீபமொன்று – தம்பிக்கு எந்த ஊரு – இளையராஜா
அரும்பாகி மொட்டாகி – எங்க ஊரு காவக்காரன் – இளையராஜா
8. ஹம்ஸாநந்தி
வேதம் – சலங்கை ஒலி – இளையராஜா
புத்தம்புதுப்பூ பூத்தது – தளபதி – இளையராஜா
ராத்திரியில் பூத்திருக்கும் – தங்கமகன் – இளையராஜா
ராகதீபம் ஏற்றும் நேரம் – பயணங்கள் முடிவதில்லை – இளையராஜா
9. ஹம்ஸத்வனி
மயிலே மயிலே – கடவுள்  அமைத்த மேடை – இளையராஜா
பூமுடித்து பொட்டு வைத்த – என் புருஷன்தான் எனக்கு மட்டுந்தான் – இளையராஜா(பல்லவி)
காலம் மாறலாம் – வாழ்க்கை – இளையராஜா(சரணத்தில் மட்டும் ‘த’ வருகிறது)
இரு விழியின் வழியே – சிவா – இளையராஜா
10. சக்கரவாகம்
வானிலே தேனிலா – காக்கிச்சட்டை – இளையராஜா (சரணத்தில் ‘ரி’ வருகிறது)
வனிதாமணி – விக்ரம் – இளையராஜா
நீபாதி நான்பாதி – கேளடி கண்மணி – இளையராஜா
நல்லவர்க்கெல்லாம் – தியாகம் – இளையராஜா
11. மத்யமாவதி
அடி பெண்ணே – முள்ளும் மலரும் – இளையராஜா(சரணத்தில்  அனுசுரங்கள்)
ஆகாய கங்கை – தர்மயுத்தம் – இளையராஜா
என் கல்யாண வைபோகம் – அழகே உன்னை ராதிக்கிறேன் – இளையராஜா
துள்ளித்துள்ளி – சிப்பிக்குள் முத்து – இளையராஜா
ஆனந்தத் தேன்சிந்தும் – மண்வாசனை – இளையராஜா (சரணத்தில் இரண்டு ‘நி’ வருகிறது)
சோலைக்குயிலே – பொண்ணு ஊருக்கு புதுசு – இளையராஜா
தாலாட்டு – அச்சாணி – இளையராஜா
12. கீரவாணி
கீரவாணி – பாடும் பறவைகள் – இளையராஜா
போவோமா ஊர்கோலம் – சின்னத்தம்பி – இளையராஜா
நெஞ்சுக்குள்ளே – பொன்னுமணி – இளையராஜா
தங்கச்சங்கிலி – தூறல் நின்னுப்போச்சு – இளையராஜா
13. மோஹனம்
மலர்கள் நனைந்தன – இதயக்கமலம் – கே.வி.எம்.
பூவில் வண்டு கூடும் – காதல் ஓவியம் – இளையராஜா
வருக வருகவே – மனைவி ரெடி – இளையராஜா
இந்த அம்மனுக்கு – தெய்வ வாக்கு – இளையராஜா
இரு பறவைகள் – நிறம் மாறாத பூக்கள் – இளையராஜா(சரணத்தில் இறுதியில் அனுசுரங்கள்)
வந்ததே குங்குமம் – கிழக்கு வாசல் – இளையராஜா
மீன்கொடித் தேரில் – கரும்புவில் – இளையராஜா
நான் உந்தன் தாயாக வேண்டும் – உல்லாசப்பறவைகள் – இளையராஜா
ஒரு ராகம் பாடலோடு – னந்தராகம் – இளையராஜா
14. சிந்துபைரவி
நிலவே முகம் காட்டு – எஜமான் – இளையராஜா
தென்றல் வந்து – அவதாரம் – இளையராஜா
முத்துமணிமாலை – சின்னக்கவுண்டர் – இளையராஜா
சாமிக்கிட்ட – வாரம்பூ – இளையராஜா
வளையோசை – சத்யா – இளையராஜா
மானே தேனே – உதய கீதம் – இளையராஜா
15. சண்முகப்ரியா
தகிட ததிமி – சலங்கை ஒலி – இளையராஜா
தம்தன நந்தன – புதிய வார்ப்புகள் – இளையராஜா
16. சிவரஞ்சனி
காத்திருந்து காத்திருந்து – வைதேகி காத்திருந்தாள் – இளையராஜா
குயில்பாட்டு – என் ராசாவின் மனசிலெ – இளையராஜா
வள்ளி வள்ளி – தெய்வவாக்கு – இளையராஜா
வா வா அன்பே – ஈரமான ரோஜாவே – இளையராஜா
17. கரஹரப்ரியா
பூ மலர்ந்திட – டிக் டிக் டிக் – இளையராஜா
தானா வந்த சந்தனமே – ஊரு விட்டு ஊரு வந்து – இளையராஜா
பூங்காத்து திரும்புமா – முதல் மரியாதை – இளையராஜா
18. ஹிந்தோளம்
நானாக நானில்லை – தூங்காதே தம்பி தூங்காதே – இளையராஜா (சரணத்தில் அனுசுரங்கள்)
ஆனந்தத் தேன்காற்று – மணிப்பூர் மாமியார் – இளையராஜா
கண்ணா உன்னைத் தேடுகிறேன் – உனக்காகவே வாழ்கிறேன்
19. சலநாட்டை
ஆளை அசத்தும் – கன்னிராசி – இளையராஜா
பனிவிழும் மலர்வனம் – நினைவெல்லாம் நித்யா – இளையராஜா
20. காபி
சங்கத்தில் பாடாத கவிதை – ட்டோ ராஜா – இளையராஜா
ஏ பாடல் ஒன்று – ப்ரியா – இளையராஜா
செம்பருத்திப் பூவு – செம்பருத்தி – இளையராஜா
21. சந்திரகெளன்ஸ்
பாட வந்ததோர் கானம் – இளமைக் காலங்கள் –  இளையராஜா (சரணத்தில் அனுசுரங்கள்)
அழகுமலர் ஆட – வைதேகி காத்திருந்தாள் – இளையராஜா
வெள்ளிச் சலங்கைகள் – காதல் ஓவியம் – இளையராஜா
22. சுபபந்துவராளி
வைகறையில் – பயணங்கள் முடிவதில்லை – இளையராஜா
தீர்த்தக்கரை ஓரத்திலே – தீர்த்தக்கரையினிலே – இளையராஜா
23. பஹாடி
ஏதேதோ எண்ணம் – புன்னகை மன்னன் – இளையராஜா
ஒரே நாள் – இளமை ஊஞ்சலாடுகிறது – இளையராஜா
இந்த மான் – கரகாட்டக்காரன் – இளையராஜா
24. பேரி
மேகம் கறுக்குது – னந்த ராகம் – இளையராஜா
பூவே பூச்சூடவா – பூவே பூச்சூடவா – இளையராஜா
வெள்ளி கொலுசுமணி – பொங்கி வரும் காவேரி – இளையராஜா
நீலவான ஓடையில் – வாழ்வே மாயம் – கங்கை அமரன்
வசந்த காலங்கள் – தியாகம் – இளையராஜா
சிந்து நதிக்கரை – நல்லதொரு குடும்பம் – இளையராஜா
சின்னஞ்சிறு வயதில் – மீண்டும் கோகிலா – இளையராஜா
25. ஸ்ரீரஞ்சனி
ஒரு ராகம் – உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் – இளையராஜா
பகலிலே ஒரு நிலவினை – நினைவே ஒரு சங்கீதம் – இளையராஜா
நாதம் எழுந்ததடி – கோபுர வாசலிலே – இளையராஜா
26.விஜயநகரி
குடகுமலைக் காற்றில் – கரகாட்டக்காரன்  – இளையராஜா
வண்ணநிலவே – பாடாத தேனீக்கள் – இளையராஜா
27.போஹி
காலைநேரப் பூங்குயில் – அம்மன் கோயில் கிழக்காலே – இளையராஜா
இன்றைக்கு ஏனிந்த னந்தமே – வைதேகி காத்திருந்தாள் – இளையராஜா
தங்கரதம் வந்தது – கலைக்கோயில் – விஸ்வநாதன் ராமமுர்த்தி
28.வகுளாபரணம்
ஆறும் அது ஆழமில்ல – முதல் வசந்தம் – இளையராஜா
சொந்தமில்லை பந்தமில்லை – அன்னக்கிளி – இளையராஜா
29.பாகேஸ்வரி
காவியம் பாடவா – இதயத்தைத் திருடாதே – இளையராஜா
மழை வருது – ராஜா கையை வச்சா – இளையராஜா
30.ஸ்யாம் கல்யாண்
நீ ஒரு காதல் சங்கீதம் – நாயகன்
31.சமுத்திரப்ரியா
கண்ணம்மா – வண்ண வண்ணப்பூக்கள்
32.ரசிகரஞ்சனி
நீலக்குயிலே – மகுடி
எதிலும் இங்கு இருப்பான் – பாரதி
அமுதே தமிழே – கோயில்புறா

சிமுலேஷன் என்ற நண்பரின் இணையப்பக்கத்திலும் தொடர்ச்சியாக நல்ல இசை விவாதங்கள் உள்ளன,பெரும்பாலான கட்டுரைகளை விரும்பி வாசித்தேன். க்ருத்து சொல்லுமளவுக்கு எனக்கு இசைப்பழக்கம் இல்லை
http://simulationpadaippugal.blogspot.com/

1 comment:

  1. இளையராஜ அவர்களின் பாடல்களுக்கும் இசைக்கும் கேட்கவா வேண்டும்,ராக ராஜாங்கம் என்றால் அதுதான்,
    இன்னும் அவரை கடந்து வருவது கொஞ்சம்
    சிரமமாகத்தான் இருக்கிறது,

    ReplyDelete