தஞ்சைப் பெரியகோவிலும் தேவதாசி மரபும். வெளி ரங்கராஜன்
![]() |
Picture Courtesy: Celeste - Artwork - Devadasi |
தலித்துகள், அரவாணிகள் போன்ற விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் குறித்த
கவனங்களும் பதிவுகளும் பெருகி வரும் நிலையில் ஆணியச் சமூகத்தின் சுரண்டல்
கருவிகளாக ஆக்கப்பட்டிருந்த பரிதாபத்திற்குரிய தேவதாசியரின் சுயவாழ்க்கை
குறித்த பதிவுகளும் நிலைப்பாடுகளும் அவர்களுடைய வாழ்வியல் பற்றிய மேலான
புரிதலுக்கு உதவ முடியும். தேவதாசி மரபில் வந்தவரும், கலைத்திறமையும்,
புலமையும் கொண்டவருமான பெங்களூர் நாகரத்தினம்மா தன்னுடைய சுயசரிதையை
கன்னடத்தில் எழுதியிருக்கிறார். அண்மையில் அரவாணித் தோழியரான லிவிங் ஸ்மைல்
வித்யா ‘என் பெயர் வித்யா’ என்று எழுதிய சுயசரிதை சில கல்லூரிகளில்
துணைப்பாடமாக வைக்கப்பட்டுள்ளது. நம்முடைய சமூகத்தின் ஒழுக்கவியல்
கண்ணோட்டத்தை தேவதாசியர் பார்வையிலிருந்து பரிசீலனை செய்யும் போதே
கற்பொழுக்கம் குறித்த ஆணிய இரட்டை அளவுகோல்கள் புலப்படும்.