Monday, September 22, 2014

பத்ரி சேஷாத்ரி: எழுத்தாளரின் உரிமைகள்

பத்ரி சேஷாத்ரி: எழுத்தாளரின் உரிமைகள்: (உரிமை = Rights; உரிமம் = license என்ற பொருளில் பயன்படுத்துகிறேன்.) நேற்று கோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த தாயகம் கடந்த தமிழ் என்ற மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அதில் தொழில்நுட்பம் குறித்தான ஓர் அமர்வில் கவிஞர், முனைவர் சேரன் தலைமை தாங்க, எஸ்.ஆர்.எம் துணைவேந்தர் பேரா. பொன்னவைக்கோ, முத்து நெடுமாறன், நான், திருமூர்த்தி ரங்கநாதன் ஆகியோர் பேசினோம். எழுத்தாளர்கள் (அதுவும், தமிழ் எழுத்தாளர்கள்) இவைகுறித்தெல்லாம் அதிகம் கவலைப்பட்டதில்லை. இதுவரை. ராயல்டி பெறுவதற்கே கஷ்டப்படும்போது... ஆனால் இங்கும் இப்போது வாய்ப்புகள் நிறைய வரப்போகின்றன. எழுத்தாளர் எழுதும் எதற்குமான காப்புரிமை (Copyright) அவரிடமே இருக்கிறது. இது ஒரு பதிப்பாளரிடம் போய் சில எடிட்டோரியலாகச் சில மாற்றங்களை அடைந்தாலும்கூட இறுதி வடிவத்துக்கான காப்புரிமையும் அற உரிமையும் (Moral rights) எழுத்தாளரைச் சார்ந்தது. காப்புரிமை என்பதைப் பிறருக்கு விற்கலாம். பிறர் பெயரில் எழுதிவைக்கலாம். ஆனால் அற உரிமை பணம் சார்ந்தது அல்ல. அது எழுத்தாளரிடம் எப்போதும் இருக்கும். அற உரிமை என்பது இந்த எழுத்து இவருடையது என்று குறிக்கப்பெறுவது. அந்த எழுத்தை எழுத்தாளரின் அனுமதி இன்றி மாற்ற முடியாது. அந்த எழுத்தை முற்றிலும் சிதைத்து அல்லது ஒரு பாத்திரத்தின் குணாதிசயத்தை மாற்றி அதே எழுத்தாளரின் பெயரில், அவரது அனுமதி இன்றி வெளியிட முடியாது. காப்புரிமையை ஓர் எழுத்தாளர் இன்னொருவருக்கு விற்றபின்னாலும், தன் எழுத்து எந்தவிதத்திலும் மாற்றப்படாமல் இருக்க அற உரிமையைப் பயன்படுத்தி வழக்கு தொடுக்கலாம்.

No comments:

Post a Comment